தமிழகத்தில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. நாம் தமிழர் கட்சியை பொறுத்தவரை 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டி போடுகிறது. 117 ஆண்கள், 117 பெண்கள் என வேட்பாளர்களை சீமான் அறிவித்தார். ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
சீமான் காரைக்குடியில் போட்டியிடுவதாகவும் அறிவித்திருக்கிறார். வேட்பு மனுத் தாக்கல் நிறைவடைந்து இன்று இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில், தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கும் சீமான் திமுக ஆட்சியின் அவலங்கள் என்று கூறி பல்வேறு மக்கள் பிரச்சனைகளை எடுத்து கூறி வருகிறார்.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் ஹான்சி ஷோபா ராணியை ஆதரித்து தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கற்பூரம் மேற்கொண்டார். அப்போது, நீங்கள் தனக்கும் தன் கட்சி வேட்பாளர்களுக்கும் ஓட்டு கூட போட வேண்டாம் என்றும் இறைவனிடம் வேண்டும்பொழுது இத்தனை ஆண்டு காலமாக உழைத்துக் கொண்டிருக்கும் தாங்கள் வெற்றி பெற வேண்டும் என்று பிரார்த்தனை மட்டும் செய்யுங்கள் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இதுமட்டும் நடந்துட்டா! தேர்தல்ல இருந்தே விலகிடுறேன்!! பாஜக, காங்., கட்சிகளுக்கு சீமான் சவால்!
இதைப்போல் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்தும் போது தங்களுக்காக வேண்டுதல் மட்டும் வையுங்கள் என்றும் ஓட்டு கூட போட வேண்டாம் என்றும் கூறியுள்ளார். ஏற்கனவே முருகனிடம் வேண்டி விட்டதாகவும் சீமான் பேசியிருந்தார். என் வெற்றியை கர்த்தரிடம் மற்றும் அல்லாஹ்விடம் ஒப்படைப்பதாக தெரிவித்தார்.
இதையும் படிங்க: டேய் இங்க வாடா..! நாம் தமிழர் பரப்புரையில் TVK கோஷமிட்ட இளைஞர்..! சீமான் ஆவேசம்..!!