நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் மற்றும் அவரது மனைவி கயல்விழி தம்பதியினருக்கு இன்று இரண்டாவது குழந்தையாக ஒரு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தி கட்சித் தொண்டர்கள், நிர்வாகிகள் மற்றும் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நல்ல செய்தி அவர்களின் இல்லத்தில் பெரும் கொண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
சீமான் 2013 செப்டம்பர் மாதம் தமிழ்நாட்டின் முன்னாள் சட்டப்பேரவைத் தலைவரும் அமைச்சருமான காளிமுத்துவின் மகள் கயல்விழியை தமிழ் முறைப்படி திருமணம் செய்துகொண்டார். நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்ற இந்தத் திருமணம் தமிழ்த் தேசிய அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது. தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்டோர் இதற்கு தலைமை தாங்கினர்.

திருமணத்திற்குப் பிறகு 2019-ம் ஆண்டு இந்தத் தம்பதியினருக்கு முதல் குழந்தையாக ஆண் குழந்தை பிறந்தது. அந்த மகனுக்கு மாவீரன் பிரபாகரன் என்று பெயர் சூட்டப்பட்டது. இப்போது ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் குடும்பம் மீண்டும் ஒரு பெண் குழந்தையின் வருகையால் பூரணமடைந்துள்ளது. கயல்விழி ஒரு வழக்கறிஞர் ஆவார். அரசியலில் இருந்து சற்று விலகியிருந்த அவர் சமீப காலமாக சீமானுடன் பிரசாரங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் பங்கேற்று வருகிறார்.
இதையும் படிங்க: நல்லவேளை தப்பிச்சீங்க..! நான் மட்டும் அசெம்பிளிக்கு வந்தேன்னா..! சீமான் காட்டம்..!!
நாம் தமிழர் கட்சியின் தொண்டர்கள் சமூக ஊடகங்களில் வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர். “அண்ணன் சீமானுக்கு இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது” என்று பரவலாகப் பகிரப்பட்டு, குழந்தைக்கு நீண்ட ஆயுளும் நல்ல உடல்நலமும் வேண்டி பிரார்த்தனைகள் செய்யப்படுகின்றன. குழந்தைக்கு என்ன பெயர் சூட்டப்படும் என்ற எதிர்பார்ப்பும் ஏற்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சீமானின் ஆமைக்கறி கதை.. உண்மையை உடைத்த இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்..!