ஆந்திரப் பிரதேசத்தின் அல்லூரி சீதாராமராஜு மாவட்டத்தின் மாரேடுமில்லி வனப்பகுதியில் இன்று மீண்டும் துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது.
நேற்று ஹிட்மா உட்பட ஆறு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இன்று நடந்த காவல் துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் ஏழு மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர்.
நேற்று ஆந்திரப் பிரதேசத்தின் அல்லுரி சீதாராமராஜு மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில், நக்சல் அமைப்பின் தலைவன் மத்வி ஹித்மா உள்பட 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதனை அடுத்து, ஆந்திரப் பிரதேசம் முழுவதும் 50 மாவோயிஸ்டுகள் கைது செய்யப்பட்டனர். நேற்றைய நடவடிக்கைக்குப் பிறகு, மீதமுள்ள மாவோயிஸ்டுகள் காடுகளில் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், கிரேஹவுண்ட்ஸ் மற்றும் ஆக்டோபஸ் படைகளைச் சேர்ந்த வீரர்கள் கூட்டாக தேடுதலை மேற்கொண்டன.
இதையும் படிங்க: #BREAKING காலையிலேயே துப்பாக்கிச்சூடு... கோயிலுக்குள் இரட்டை கொலை... குற்றவாளி சுட்டுப்பிடிப்பு...!
காலை 8 மணியளவில், குத்துலுரு மலைப் பகுதியில் மாவோயிஸ்டுகள் போலீசார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர். பதிலடி கொடுக்கும் விதமாக, போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் கொல்லப்பட்டனர்.
இந்த மோதலில் கொல்லப்பட்டவர்களில் மாவோயிஸ்ட் படை தளபதிகள் மற்றும் ஆயுதமேந்திய காவலர்கள் அடங்குவர் என்பது ஆரம்பகட்ட தகவலாகும். அடையாளம் காணும் பணி இன்னும் நடந்து வருகிறது. என்கவுன்டர் நடந்த இடத்திலிருந்து மூன்று ஏகே-47 ரைபிள்கள், 2 எஸ்எல்ஆர்கள் மற்றும் கைத்துப்பாக்கிகள் மீட்கப்பட்டன. போலீசாருக்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை.
நேற்று ஹிட்மா என்கவுன்டருக்குப் பிறகு, சத்தீஸ்கரைச் சேர்ந்த மேலும் சில மாவோயிஸ்டுகள் ஆந்திர எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாகவும், அவர்களைத் தடுக்க நடவடிக்கை தொடர்ந்ததாகவும் டிஜிபி ஹரிஷ் குமார் குப்தா தெரிவித்தார்.
நேற்று நடந்த என்கவுன்டரில் இறந்த ஹிட்மாவின் மனைவி ராஜே உட்பட ஆறு பேரின் உடல்கள் இன்று காலை அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்படுகின்றன. மாவோயிஸ்ட் ஆதரவாளர்கள் ரம்பச்சோதவரம் மருத்துவமனையில் இருந்து உடல்களை பெற்றுக்கொள்ள உள்ளார். இருப்பினும், இறுதிச் சடங்குகள் சத்தீஸ்கரில் நடைபெறும் என்று தெரிகிறது. இன்றைய என்கவுன்டரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக ரம்பச்சோதவரம் பகுதி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன.
இந்த இரண்டு நாட்களில் மொத்தம் 13 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டுள்ளனர். இது ஆந்திரா-சத்தீஸ்கர்-தெலுங்கானா (AOB) பகுதிகளில் மாவோயிஸ்டுகளுக்கு பெரும் அடியாக அமைந்ததுள்ளது. ஹிட்மாவின் மரணத்துடன் தண்டகாரண்யாவில் மாவோயிஸ்ட் இயக்கம் கிட்டத்தட்ட சரிந்துவிட்டதாக சத்தீஸ்கர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், மீதமுள்ள சில மாவோயிஸ்டுகள் காடுகளில் இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் மாரேடுமில்லி, ரம்பச்சோதவரம், சிந்தூர் மற்றும் வி.ஆர். புரம் பகுதிகளில் உயர் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING அதிகாலையிலேயே அதிர்ந்த டெல்லி... போலீஸ் நடத்திய என்கவுன்ட்டரில் 4 முக்கிய குற்றவாளிகள் சுட்டுக்கொலை...!