கோவையில் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் கைது செய்யப்பட்ட, ரிஸ்வான் என்ற இளைஞருக்கு 12 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்ஸோ நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தண்டனை பெற்ற ரிஸ்வான், ஒவ்வொரு முறையும் போலீசார் பிடிக்கச் சென்றபோது பிளேடால் அறுத்துக் கொள்வேன் என மிரட்டிய நபர் என்பது குறிப்பிடத்தக்கது.
கோவை உக்கடம் அல் அமீன் காலனியை சேர்ந்தவர் ரிஸ்வான் (31). இவர் கடந்த 2021 ஆம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக ஆர்.எஸ் புரம் அனைத்து மகளிர் போலீசார் ரிஸ்வான் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். அதனைத் தொடர்ந்து ரிஸ்வான் பிணையில் வெளியே வந்து சுற்றித்திரிந்தார்.
இந்த நிலையில் இவ்வழக்கின் இறுதி கட்ட விசாரணை கடந்த 2 வாரத்திற்கு முன் போக்ஸோ நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது விசாரணைக்கு ஆஜரான ரிஸ்வான் தனக்கு தண்டனை கொடுக்கக் கூடாது, தன்னை கைது செய்யக்கூடாது எனக் கூறி தான் மறைத்து வைத்திருந்த பிளேடால் கழுத்தை அறுத்துக் கொள்வேன் என மிரட்டி சுமார் 4 மணி நேரம் தகராறில் ஈடுபட்டார்.
இதையும் படிங்க: பாலியல் ஆசைக்கு இணங்க மறுத்த நந்தினி... ஆபாச பேசி மிரட்டல் விடுத்தல் அதிமுக பிரமுகர் கைது...!
இதையடுத்து போலீசார் அவரின் உயிர் பாதுகாப்பு கருதி விடுவித்த நிலையில், 3 நாட்கள் கழித்து அவரை மூன்று மணி நேரம் கண்காணித்து தனிப்படை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த நிலையில் வழக்கின் தீர்ப்பானது இன்று வெளியானது. அதில் ரிஸ்வான் குற்றவாளி என்றும் போக்சோ வழக்கில் 7 ஆண்டுகள், கொலை மிரட்டல் வழக்கில் 5 ஆண்டுகள் என 12 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.7 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: ஓடும் ரயில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம் நினைவிருக்கா?... சாட்டையை சுழற்றிய நீதிமன்றம்...!