பெண்களுக்கு எதிரான பாலியல் அத்துமீறல் என்பது உலகெங்கிலும் நிலவும் ஒரு மிகப்பெரிய சமூகப் பிரச்சினை. இது பெண்களின் உரிமைகள், பாதுகாப்பு, மற்றும் மனித மாண்பை மீறும் ஒரு கடுமையான குற்றம். இந்தியாவிலும், உலகின் பல பகுதிகளிலும், பாலியல் அத்துமீறல் சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன, இது சமூகத்தில் ஆழமான வேர் ஊன்றியுள்ள பாலின சமத்துவமின்மை, ஆணாதிக்க மனோபாவம், மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறையை பிரதிபலிக்கிறது.
இது பொது இடங்களில், பணியிடங்களில், கல்வி நிறுவனங்களில், வீடுகளில், மற்றும் ஆன்லைன் தளங்களில் கூட நிகழ்கிறது. குறிப்பாக பள்ளி மாணவிகளுக்கு எதிராக நிகழும் பாலியல் வன்முறை சம்பவங்கள் அதிகரித்துள்ளன. மேலும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு கூட பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது.

வயது வித்தியாசம் இல்லாமல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாலியல் தொல்லை பெரும் சமூக பிரச்சனையாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அகில இந்திய இந்து மகா சபா தலைவர் லோக்ச வழக்கில் கைது செய்யப்பட்டு இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கல்லூரி வளாகத்திலேயே நடந்த கொடூரம்… மேற்கு வங்கத்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை…!
அகில இந்திய இந்து மகா சபா தலைவராக செயல்பட்டு வருபவர் கோடம்பாக்கம் ஸ்ரீ. இவர் சிறுமி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் கோடம்பாக்கம் ஸ்ரீயை கைது செய்துள்ளனர். அவர் மீது போக்சோ, வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த தியாகராய நகர் அனைத்து மகளிர் போலீசார் கைது செய்தனர்.
இதையும் படிங்க: வீடியோ அனுப்புறியா? இன்டர்னல் மார்க்ல கை வைக்கவா.. பாலியல் தொல்லை குறித்து மாணவியின் அதிர்ச்சியூட்டும் ஆடியோ..!