சித்த மருத்துவம், தமிழகத்தின் பாரம்பரிய மருத்துவ முறையாக, பல நூற்றாண்டுகளாக மக்களின் உடல் மற்றும் மன நலத்தைப் பேணி வருகிறது. இதில் 32 வகையான புற மருத்துவ முறைகள் உள்ளன. அவற்றில் முக்கியமானவை புகை சிகிச்சை மற்றும் பொடி திமிர்தல் (மூலிகைப் பொடிகளால் உடலைத் தேய்த்தல்). இந்த சிகிச்சைகள் மூலிகைகள், தாதுக்கள் மற்றும் இயற்கைப் பொருட்களை அடிப்படையாகக் கொண்டு, சுவாசப் பிரச்சினைகள், தோல் நோய்கள், வாத நோய்கள், தசை வலி போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன.
புகை சிகிச்சையில், குறிப்பிட்ட மூலிகைகள் அல்லது மருத்துவப் பொருட்களை எரித்து வெளிவரும் புகையை நோயாளி சுவாசிக்கச் செய்வது அல்லது உடலின் பாதிக்கப்பட்ட பகுதியில் செலுத்துவது அடங்கும். இது சுவாச அமைப்பை சுத்தப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது. பொடி திமிர்தலில் மஞ்சள், கொள்ளு போன்ற மூலிகைப் பொடிகளை உடலின் குறிப்பிட்ட பகுதிகளில் அழுத்தத்துடன் தேய்த்து மசாஜ் செய்யப்படுகிறது. இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தசை இறுக்கத்தைத் தளர்த்தி, எடை குறைப்பு உள்ளிட்ட பலன்களைத் தருகிறது.

இந்த பாரம்பரிய சிகிச்சைகளுக்கு இப்போது மத்திய அரசு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இந்திய தர நிர்ணய ஆணையம் சமீபத்தில் இந்த இரு சிகிச்சைகளுக்கும் விரிவான கோட் ஆஃப் பிராக்டீஸ் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் நோக்கம், நோயாளிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது, சிகிச்சை முறைகளில் ஒருமைப்பாட்டை கொண்டு வருவது மற்றும் தரத்தை உயர்த்துவது ஆகும். AYUSH துறையின் வளர்ச்சியுடன் இணைந்து, இந்த தர நிர்ணயங்கள் சித்த மருத்துவத்தை நவீன சுகாதார அமைப்புடன் இணைக்கும் முயற்சியாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: "குழந்தைகளை பலி கொடுக்கவா ஆட்சி"..? மௌனம் வேண்டாம் முதல்வரே..! கிருஷ்ணசாமி ஆதங்கம்..!!
இந்த சிகிச்சைகளை மேற்கொள்ளும் நோயாளிகளை முன்கூட்டியே மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. நோயாளியின் உடல்நிலை மதிப்பீடு, சிகிச்சை தொடர்பான ஆவணப்பதிவு, கண்காணிப்பு ஆகியவை கட்டாயம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த சிகிச்சைக்கான எழுத்துப்பூர்வ ஒப்புதல் பெறுவதும், சிகிச்சைக்குப் பிறகு ஏற்படும் பக்கவிளைவுகள் குறித்து பதிவு செய்வது கட்டாயம் என்றும் இந்திய தர நிர்ணய ஆணையம் கூறியுள்ளது.
இதையும் படிங்க: நீட் தேர்வர்கள் கவனத்திற்கு... புதிய இணையதளம் தொடக்கம்... எதற்காக தெரியுமா?