இஸ்ரேல்- ஈரான் போர் பதட்டம் காரணமாக சமையல் எரிவாயு வருவதில் சிக்கல். வணிக பயன்பாட்டுக்கு இயக்கப்படும் லாரிகளுக்கு கேஸ் லோடு ஏற்றுவது நிறுத்தம்.
கேஸ் லோடு கிடைக்காததால் எல்.பி.ஜி டேங்கர் லாரி உரிமையாளர்கள் தவிப்பு. லோடு கிடைக்காததால் 25 சதவீத எல்.பி.ஜி டேங்க் லாரிகள் நிறுத்தம். தினந்தோறும் 25 கோடி ரூபாய் அளவிற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதாக லாரி உரிமையாளர்கள் வேதனை.
தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடக, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கியது தென் மண்டல எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம். இந்த சங்கம் நாமக்கல் லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்த சங்கத்தில் சுமார் 4,500 கேஸ் டேங்கர் லாரிகள் உள்ளன. இவைகள் அனைத்தும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஐ.ஓ.சி, பி.பி.சி, எச்.பி.சி ஆகிய மூன்று ஆயில் நிறுவனங்களுக்கு சொந்தமான சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து சமையல் எரிவாயுவை சிலிண்டர் நிரப்பும் மையங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் இயக்கப்பட்டு வருகிறது.
அமெரிக்கா இஸ்ரேல் சேர்ந்து ஈரானுக்கு எதிராக போர் நடத்தி வருவதால் சமையல் எரிவாயு இந்தியாவில் பெரிய அளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 80 சதவீதம் எரிவாயு வளைகுடா நாடுகளில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்த போரால் கப்பல் வரவில்லை . வணிகத்திற்கு பயன்படுத்த கூடிய கேஸ் லாரிகளுக்கு ஏற்றுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. 25 சதவீதம் எல்.பி.ஜி லாரிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. போர் தொடர்ந்து நடந்தால் தென் மாநில எல்.பி.ஜி கேஸ் டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு பெரிய இழப்பு ஏற்படும். மக்களுக்கு சமையல் எரிவாயு கிடைக்காமல் சிக்கல் ஏற்படும். சமையல் எரிவாயு விலை பல மடங்கு உயரும் அபாயம் உள்ளது.
இதையும் படிங்க: மக்களே.. இனி வீட்டு சாப்பாடு தான்..!! ஹோட்டல்களுக்கு ஆப்படித்த ஈரான் போர்..!! விலை எல்லாம் தாறுமாறா ஏறப்போகுது..!!
இந்தியாவின் எல்பிஜி தேவையில் சுமார் 60 விழுக்காடு சவுதி அரேபியா மற்றும் கத்தார் போன்ற நாடுகளிலிருந்து செய்யப்படுகிறது. இச்சூழலில் மேற்காசிய போரால் அந்நாடுகளில் பதற்றம் நிலவி வருவதாலும் ஹார்மூஸ் நீரணை பாதை முடங்கி உள்ளதாலும் இந்தியாவின் எல்பிஜி விநியோகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலியால் பெங்களூருவில் உள்ள உணவகங்கள் இன்று முதல் மூடப்படும் என்று பெங்களூரு உணவகங்கள் சங்கம் அறிவித்துள்ளது. இத்தகைய சூழலில் பெங்களூருவில் உள்ள 3000-க்கு மேற்பட்ட உணவகங்கள் இன்று முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் உணவகங்களை மட்டுமே நம்பி இருக்கும் மாணவர்கள் முதியோர் நோயாளிகள் தினக்கூழி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னை மணலியில் உள்ள ஐ.ஓ.சி. (IOC) சிலிண்டர் நிரப்பும் நிலையத்தில் 19 கிலோ வணிகப் பயன்பாட்டு எரிவாயு சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டு, வீட்டு உபயோக சிலிண்டர் விநியோகம் பாதியாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது இதனிடையே, தமிழகத்தில் கையிருப்பில் உள்ள சமையல் எரிவாய் சிலிண்டர்கள் மற்றும் வணிக சிலிண்டர்களுடைய விவரத்தை தலைமை செயலாளர் கேட்டுள்ளார். இதனிடையே எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் தங்களது சேவையை குறைத்து வருவது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: கியாஸ் சிலிண்டர் தட்டுப்பாடு! ஹோட்டல் உரிமையாளர்களுடன் தமிழக அரசு நாளை அவசர ஆலோசனை!