உடன்பிறப்புகளான நீங்க வெளிப்படுத்துற உணர்வுகளைக் கவனிப்பதாகவும், தேர்தல் முடிவுகளைக் கடந்து, தலைவர் கலைஞர் ஊட்டிய உணர்வோட பயணிக்குற நமக்கு, புத்தெழுச்சி ஊட்டக் கூடிய நாளா, தலைவர் கலைஞரின் பிறந்தநாள் வருது என்றும் திமுக தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி, தலைவர் கலைஞரின் பிறந்தநாளைக் கொண்டாடுற அதேவேளையில், சோஷியல் மீடியாவுலயும் தலைவர் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைப் பரப்புவோம் என்றும் இளைய தலைமுறைக்கு நம்மோட வரலாற்றையும், தேவையையும் எடுத்துச் சொல்வோம் என்றும் கூறினார். தமிழ்நாட்டின் எதிர்காலம் சிறக்கணும்னா அதுக்கு தி.மு.க.தான் தேவை என்பதை இளைஞர்களுக்குச் சொல்ல தலைவர் கலைஞரின் பிறந்தநாளில் உறுதியேற்று உழைக்கத் தொடங்குவோம் என தெரிவித்தார்.

அற்ற குளத்து அறுநீர்ப் பறவை போல இல்லாமல், கொட்டியும் ஆம்பலும் போல எப்போதும் உடனிருப்பவர்கள்தான் தி.மு.க. உடன்பிறப்புகள் என்று கூறியுள்ள ஸ்டாலின், கலைஞரின் உடன்பிறப்புகளான நமக்கு ஊக்கமும் உற்சாகமும் தருவதற்காகவே வரவிருக்கிறது, ஜூன் 3, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரின் பிறந்த நாள் என தெரிவித்தார்.அந்த நாளில் கழகக் கிளைகள் எங்கும் கருப்பு - சிவப்புக் கொடி உயர்ந்து பறக்கட்டும். ஏழைகளுக்கும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கும் உதவிகள் வழங்குங்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: நானாவே இருந்தாலும்... யாரையும் காப்பாத்த முயற்சிக்காதீங்க... 38 பேர் குழுவிற்கு ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்ட ஸ்டாலின்...!
இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட அனைத்து சமூகவலைத் தளங்களிலும், நவீனத் தமிழ்நாட்டின் சிற்பி தலைவர் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளைப் பரப்புங்கள் என்றும் தி.மு.க.வினரான நம் பயணம் ஒருநாளும் ஓயாது, என்றென்றும் தொடரும் என ஜூன் 3 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் மீது ஆணையிட்டு உறுதியேற்போம் எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஸ்டாலின் அதிரடி Move... திமுகவில் மீள் கட்டமைப்பு..! தோல்வியை ஆராயும் குழுவுடன் தீவிர ஆலோசனை..!