அன்பில் மகேஷ் பொய்யாமொழி வீட்டில் சோதனை நடைபெற்று வரும் நிலையில் இது மற்றுமொரு திசை திருப்பும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டினால் பாதிக்கப்படும் மக்களின் போராட்டங்கள் மற்றும் பட்டினப்பாக்கம் மீனவர்கள் போராட்டம் ஒரு பக்கம் இருப்பதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
நேபாளத்தில் காணாமல் போனவர்களின் உறவினர்கள் உரிய பதில் கிடைக்காமல் தலைமைச் செயலகம் முன்பு போராட்டம் நடத்தி வருவதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார். அதுமட்டுமல்லாது ராமநாதபுரம் இரட்டை கொலை, அரசு பேருந்து ஓட்டுனர் அடித்துக் கொலை, பெண் காவலரிடம் தமிழக வெற்றிக்கழக நிர்வாகி சீண்டல் உள்ளிட்ட சம்பவங்கள் நடந்திருப்பதாகவும் ஸ்டாலின் தெரிவித்தார்.

மாநிலத்தை உலுக்கி வரும் எதையும் கண்டுகொள்ளாமல் லண்டனில் ஷூட்டிங் நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் விஜய் என்றும் விமர்சித்துள்ளார். மக்களின் கவனத்தை திசை திருப்ப ரெய்டு என்ற அஸ்திரத்தை ஏவியுள்ளது எதற்கும் லாயக்கற்ற தவெக அரசு என்று ஸ்டாலின் சாடினார். பிரச்சனைகளை சரி செய்ய முடியாத விரக்தியில் மக்களின் கவனத்தை திசை திருப்ப அன்பின் மகேஷ் வீட்டில் சோதனை நடைபெற்ற வருவதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: #BREAKING: ரெய்டு..! அன்பில் மகேஷ் மீது பாய்ந்த வழக்கு..! அரசியல் களத்தில் பெரும் பரபரப்பு..!!
எதிர்க்கட்சியினர் வீடுகளில் ரெய்டு நடத்துவதால் மக்கள் கோபத்தை தணிக்க முடியாது என்றும் தெரிவித்தார். பொய் குற்றச்சாட்டுகள் சட்டத்தின் முன் நிலைக்காது என்பதை தமிழக வெற்றிக்கழக அரசு விரைவில் உணரும் என்றும் ஸ்டாலின் தெரிவித்தார். எதிர்க்கட்சிகினர் மீதான அப்பட்டமான அரசியல் படி வாங்கும் நடவடிக்கையை சட்டரீதியாக நாங்கள் எதிர்கொள்வோம் எனவும் உறுதிப்பட கூறினார்.
இதையும் படிங்க: மின் வாரியத்தை அதானிக்கு தாரை வார்ப்பதா.? நியாயமா CM சார்.? வெளுத்துவிட்ட அப்பாவு..!!