சென்னை: தமிழக அரசியலில் புதிய சர்ச்சை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. த.வெ.க., தலைவர் விஜய்க்கு கவர்னர் அழைப்பு விடுக்க வேண்டும் என பொதுவில் அறிக்கை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின், திரைமறைவில் பழனிசாமியை முதல்வராக்க முயற்சி எடுத்ததாகக் கூறப்படுவது தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் இந்த விவகாரத்தை ஆதாரத்துடன் வெளியிட்டன. ஸ்டாலின், பழனிசாமி ஆட்சிக்கு வெளியிலிருந்து ஆதரவு அளிக்குமாறு கம்யூனிஸ்ட் தலைவர்களிடம் நேரடியாகக் கேட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இதைக் கேட்ட கம்யூனிஸ்ட் தலைவர்கள் அதிர்ச்சியடைந்தனர். “பா.ஜ.க., உடன் சேர்ந்த பழனிசாமியை தோற்கடிக்க வேண்டும் என தீவிர பிரசாரம் செய்த நீங்கள், இப்போது அவரை முதல்வராக்க முயற்சிப்பது எப்படி?” எனக் கேள்வி எழுப்பினர்.
ஸ்டாலின், “நிலைமைக்கு ஏற்றவாறு முடிவு எடுப்பதுதான் அரசியல் ராஜதந்திரம்” என பதிலளித்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர்கள், “அப்படிப்பட்ட ராஜதந்திரம் எங்களுக்குத் தெரியாது. மக்களின் தீர்ப்பை மதிப்பதுதான் எங்கள் கொள்கை” எனக் கூறி மறுத்துவிட்டனர்.
இதையும் படிங்க: கொளத்தூரில் மு.க.ஸ்டாலின் தோற்க காரணமான மூவர்?! துர்கா ஸ்டாலின் நடத்திய புலன் விசாரணையில் அம்பலம்!

இந்த அதிரடி தகவல் தி.மு.க., தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. பலரும் “50 ஆண்டுகளாக எதிர்த்த கட்சியை ஆட்சியில் அமர்த்த நாம் துணை போவதா?” எனக் கேள்வி எழுப்புகின்றனர். உதயநிதி ஸ்டாலின் விஜய் முதல்வர் ஆவதைத் தடுக்க பெரும் அழுத்தம் கொடுத்ததால் ஸ்டாலின் இந்த முடிவுக்கு வந்ததாகக் கம்யூனிஸ்ட் வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில், துணைப் பொதுச் செயலர் கனிமொழி உதயநிதியின் திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, அண்ணன் ஸ்டாலினுடன் தீவிர வாதம் செய்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. “அப்பாவும் நீங்களும் நானும் போராடிய கட்சியை ஆட்சியில் அமர்த்தினால் தி.மு.க., தொண்டர்களும் தமிழக மக்களும் நம்மை மன்னிக்க மாட்டார்கள்” என கனிமொழி உறுதியாகக் கூறியதால் ஸ்டாலின் அந்த முயற்சியை கைவிட்டதாகச் சொல்லப்படுகிறது.
தி.மு.க., நிர்வாகிகளும் தொண்டர்களும் கனிமொழிக்கு மொபைல் மூலம் அலை அலையாக நன்றி தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தி.மு.க.,வுக்குள் உள் மோதலை மீண்டும் வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.
இதையும் படிங்க: என்ன விலை கொடுத்தாலும் விஜய் முதல்வராக கூடாது! உதயநிதி பிடிவாதம்!! எதிர்ப்பு தெரிவித்த கனிமொழி!