கோவை சூலூர் பகுதியைச் சேர்ந்த லேத் ஒர்க்ஷாப் தொழிலாளி ஒருவரின் 10 வயது மகள், தனது வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தபோது, அருகிலுள்ள மளிகை கடைக்குச் சென்றுள்ளார். அதன் பின்னர் சிறுமி நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாமல் மயமாகியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் சிறுமி கிடைக்காததால், இதுகுறித்து சூலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார், சிறுமி பாதுகாப்பாக இருப்பதாக பெற்றோரிடம் தொடர்ந்து கூறி வந்ததாகத் தெரிகிறது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே சிறுமி கண்ணம்பாளையம் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியானது. சிறுமியின் உடலை மீட்ட போலீசார், உடற்கூறாய்வுக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த மர்ம மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தினர். இந்த நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கார்த்திக் மற்றும் உடந்தையாக இருந்ததாக கூறி மோகன்ராஜ் ஆகிய இருவரையும் கைது செய்துள்ளனர்.
இதையும் படிங்க: சூலூர் சிறுமி கொலை கொடூரம்..! கைதாகிய கார்த்திக்கை வெளுத்து வாங்கிய சக கைதிகள்..!
சூலூர் சம்பவத்தில் நடந்தது என்ன என்பது குறித்து விசாரணை நடத்துவதற்காக கைதாகி உள்ள கார்த்திக் மற்றும் மோகன்ராஜ் ஆகிய இரண்டு பேருக்கும் மூன்று நாள் போலீஸ் காவல் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் வேறு யாருக்கேனும் தொடர்புடையதா என்று பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற இருக்கிறது.
இதையும் படிங்க: மாற்றுத்திறனாளிப் பெண்ணை சீரழித்த கொடூரர்கள்..!! பாய்ந்தது குண்டாஸ்..!!