ஓடிடி மற்றும் சமூக ஊடகங்களில் பாலியல் ரீதியாக அல்லது அதிக அளவில் கவர்ச்சி காட்டக்கூடிய வகையிலான விளம்பரங்கள் அல்லது சைகைகள் இடம் பெறுகிற ஒளிபரப்புகளுக்கு தடைவிதிக்கோரி வழக்கு தொடரப்பட்டது. ஓடிடி வலைதலங்களில் வரம்பு மீறிய காட்சிகளை விதிகளை மீறி வைத்துள்ளதாகவும், பொதுமக்கள் அதனால் பாதிக்கப்படுவதாகவும் கூறி வழக்கறிஞர் விஸ்வசங்கர் ஜெயன் என்பவர் தொடர்ந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. உச்ச நீதிமன்ற நீதிபதி கபாய் தலைமையிலான அமர்வில் மனுவானது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட பொழுது, கடுமையான ஒரு கண்டனத்தை உச்சநீதிமன்றத்தினுடைய நீதிபதிகள் முன்வைத்திருக்கிறார்கள்.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபொழுது, மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் மனுதாரர் கூறிய கருத்துக்கள் ஏற்றுக் கொள்ளும் விதமாக இருப்பதாகவும், அவர் கூறுகிற கருத்து குறித்து மத்திய அரசு விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார். மேலும் பல்வேறு தருணங்களில் திரைப்படங்கள் அல்லது வெப் சீரிஸ்கள் குடும்பத்துடன் இணைந்து பார்க்கக்கூடியதாக இல்லை எனவும், பல இடங்களில் ஆபாசங்கள் இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் 18 வயதிற்கு மேற்பட்டோர் பார்க்க வேண்டிய வெப் சீரிஸ்கள் கூட சிறுவர்கள் பார்க்கக்கூடிய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சட்டவிரோத நிதி வழக்கு..! ஜவாஹிருல்லாவின் தண்டனைக்கு இடைக்கால தடை..!

எனவே இதற்காக தக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்தார் மத்திய அரசின் வழக்க வாதத்தை ஏற்ற நீதிபதிகள், தற்போது குழந்தைகள் கையில் அனைத்து செல்போன்களும் இருப்பதாகவும், அவர்கள் எந்த காட்சிகளை பார்க்க வேண்டும் என்பதை எப்படி நிர்ணயிக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பினர். மேலும் இந்த விவகாரத்தில் நாங்கள் மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்புவதாகவும் ஏற்கனவே இந்த விவகாரம் நிர்வாக விஷயத்தில் நீதிமன்றம் தலையிடுவதாக தொடர்ந்து தங்களுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக குற்றச்சாட்டுகள் வந்தாலும், இந்த விஷயத்தை நாங்கள் தீவிரமாக எடுத்துக் கொள்வதாகவும் தெரிவித்த நீதிபதிகள், இந்த விஷயத்தில் மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதையும் படிங்க: கடலூரை உலுக்கிய கௌரவ கொலை வழக்கு..! உச்சநீதிமன்றம் எடுத்த முக்கிய முடிவு..!