கரூர் மாவட்டத்தில் கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தின் போது ஏற்பட்ட பேரழிவு கூட்ட நெரிசல் சம்பவம் இன்னும் தமிழக அரசியல் மற்றும் சமூக வட்டாரங்களில் பெரும் விவாதப் பொருளாகத் தொடர்கிறது. அந்த சோக நிகழ்வில் 41 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்தனர்.
இந்த உயிரிழப்புகளால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும் வகையில் தமிழக அரசு எடுத்த முடிவுகளில் ஒன்றுதான் கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கியது. ஆனால் அந்த முடிவு நீதிமன்றத் தலையீட்டால் ரத்து செய்யப்பட்டது. இப்போது அந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது. வரும் ஆகஸ்ட் 14 ஆம் தேதி இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வர உள்ளது.
கரூர் சம்பவம் நடந்தபோது தமிழக வெற்றிக் கழகம் இன்னும் ஆட்சிப் பொறுப்பில் இல்லை. பின்னர் கட்சி ஆட்சியைப் பிடித்த பிறகு, பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவி செய்யும் நோக்கில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதில் முக்கியமானது உயிரிழந்தவர்களின் குடும்பங்களில் உள்ள ஒருவருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவது. ஜூலை 6 ஆம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. அதன்படி நியமன ஆணைகள் தயாரிக்கப்பட்டன.
இதையும் படிங்க: கரூர் கோரம்..! அரசு வேலையை எதிர்த்த வழக்கு..!! டி என் பி எஸ் சி பதிலளிக்க உத்தரவு..!

ஜூலை 10 ஆம் தேதி கரூருக்குச் சென்ற முதலமைச்சர் விஜய் அந்த ஆணைகளை நேரில் வழங்கினார். பெரும்பாலும் குழு நான்கு நிலை பதவிகள் வழங்கப்பட்டன. பள்ளிக் கல்வித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இளநிலை உதவியாளர் போன்ற பதவிகள் அடங்கும். இது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பெரும் ஆறுதலாக அமைந்தது என்று அரசு தரப்பில் கூறப்பட்டது. அரசின் கொள்கை முடிவு இது என்றும், மனிதாபிமான அடிப்படையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றும் விளக்கப்பட்டது.
ஆனால் இந்த முடிவு உடனடியாக எதிர்ப்பைச் சந்தித்தது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்தனர். ஜூலை 10 ஆம் தேதி முதலமைச்சர் ஆணைகளை வழங்கும் முன் நீதிமன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பித்தது. அரசு பணி ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பாதிக்கப்பட்ட ஆனந்த ஜோதி மற்றும் பிரபாகரன் ஆகியோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை 14 ஆம் தேதி உச்சநீதிமன்றம் விசாரிக்க உள்ளது.
இதையும் படிங்க: 'கர்த்தரின் தேவதூதர் விஜய், மாரியம்மன் ஜோதிமணி'... கரூரில் சர்ச்சையை கிளப்பிய போஸ்டர்!