அமலாக்கப்பிரிவு அதிகாரிகளுக்கு தனிநபர்களை கைது செய்யவும், சம்மன் வழங்கவும், ரெய்டு நடத்தவும் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அதிகாரம் இருக்கிறது என்று கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு மறு ஆய்வு செய்கிறது. இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்ய தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் உஜ்ஜால் புயான், என் கோடீஸ்வர் சிங் ஆகியோர் கொண்ட அமர்வு வரும் 7ம் தேதி விசாரணைக்கு எடுக்கிறது.

இந்த வழக்கில் கடந்த 2 ஆண்டுகளுக்குமுன் உச்ச நீதிமன்ற நீதிபதி ஏஎம் கான்வில்கர் தலைமையிலான அமர்வு அமலாக்கப்பிரிவுக்கு கைது அதிகாரம், ரெய்டு நடத்தும் அதிகாரம் தன்னிச்சையாக இருப்பதாக தீர்ப்பளித்தார்.
ஆனால், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் மனு சிங்வி ஆகியோர் மனுதாரர்கள் கார்த்தி சிதம்பரம் சார்பில் ஆஜராகினர். மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகினார். இரு நாட்களாக நடந்த வாதத்தின் அடிப்படையில் இந்தத் தீர்ப்பை மறு ஆய்வு செய்ய உச்ச நீதிம்றம் ஒப்புதல் அளித்தது.

இதையும் படிங்க: ‘அவங்க கொடுக்குறதும், நீங்க வாங்குறதும் ஈஸிதான்’.. வரி செலுத்துவோருக்குத்தான் சுமை அதிகரிக்கும்.. உச்சநீதிமன்றம் விளாசல்..!
2022, ஜூலை 22ம் தேதி உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் “சட்டவிரோதப்பணப்பரிமாற்ற வழக்கில் ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்தால் அவருக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் வழங்கலாம். அதிலும் குற்றம்சாட்டப்பட்டவர் தன்மீது குற்றமற்றவர் என்பதை நீரூபித்தால் மட்டுமே ஜாமீன் வழங்க முடியும். இதனால் குற்றம்சாட்டப்பட்டவர் குற்றம் ஏதும் செய்யவில்லை என்றால் மட்டுமே ஜாமீன் கிடைக்கும் இல்லாவிட்டால் கிடைக்காது. சட்டவிரோதப் பணப்பரிமற்றச் சட்டம் பணமோசடிக்கு எதிரானச் சட்டம். அரசியல்வாதிகளுக்கோ, எதிர்க்கட்சியினருக்கு எதிராகப் பயன்படுத்தும் ஆயுதம் அல்ல” எனத் தெரிவித்தது.

ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்த மனுதாரர்கள், “ சிறையில் இருக்கும் விசாரணைக் கைதிக்கு வழக்கு குறித்த முதல் தகவல் அறிக்கையை பகிர்ந்து கொள்ளாமல் அமலாக்கப்பிரிவு இருப்பது, குற்றம்சாட்டப்பட்டவர் தன்னை குற்றவாளி இல்லை என நிரூபிக்க எந்த வாய்ப்பும் வழங்கவில்லை. இந்தச் சட்டம் 2019ம் ஆண்டு நிதிச்சட்டத்தின் கீழ் திருத்தம் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திருத்தத்துக்கு எதிராக 240க்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கலாகின. இந்த திருத்தத்தால் தனிநபர் சுதந்திரம், சட்ட செயல்முறைகள் பாதிக்கும்” என வாதிடப்பட்டது.
இதையும் படிங்க: உச்சநீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதி.. மே 14ம் தேதி பதவியேற்கிறார் பிஆர் கவாய்..!