சென்னை: தமிழகத்தில் சிறப்பு தீவிர மறுஆய்வு (எஸ்ஐஆர்) பணி முடிந்த பிறகு, வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ம் தேதி வெளியிடப்பட்டது. இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், பிற மாநிலங்களுக்கு இடம்பெயர்ந்தவர்கள் உள்ளிட்ட காரணங்களால் 97 லட்சத்து 37 ஆயிரம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர். இதனால், தற்போது தமிழகத்தில் மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 43 லட்சமாக உள்ளது.
வரைவு பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய அல்லது முகவரி மாற்ற விரும்புபவர்கள் ஜனவரி 18-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக ஆன்லைனிலும், நேரிலும் மனு அளிக்கலாம். நேற்று வரை பெயர் சேர்க்க மட்டும் 1 லட்சத்து 65 ஆயிரம் மனுக்கள் பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர்களின் வசதிக்காக அனைத்து ஓட்டுச்சாவடி மையங்களிலும் ஜனவரி 27, 28 மற்றும் ஜனவரி 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 20 லட்சம் வாக்காளர்கள் எங்கே? SIR விவகாரம்!! திணறும் ஓட்டுச்சாவடி அலுவலர்கள்!
இந்த முகாம்களில் புதிய வாக்காளர்கள் பதிவு செய்யலாம், திருத்தங்கள் செய்யலாம். முதல்முறை வாக்காளர்களாக உள்ள இளைஞர்கள் தவறாமல் பெயர் சேர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.
2026 சட்டசபைத் தேர்தலை கருத்தில் கொண்டு வாக்காளர் பட்டியலை துல்லியமாக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பூத் லெவல் அதிகாரிகள் வீடு வீடாக சென்று சரிபார்த்து பட்டியலை தயாரித்துள்ளனர். பெயர் சேர்க்க அல்லது திருத்தம் செய்ய விரும்புபவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த வரைவு பட்டியல் இறுதி செய்யப்பட்ட பிறகு, தமிழகத்தில் துல்லியமான வாக்காளர் பட்டியல் தயாராகும். அனைத்து வாக்காளர்களும் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வாக்காளர் பட்டியல்ல பெயர் சேர்க்கணுமா? அட்ரஸ் மாத்தணுமா? 4 நாட்கள் சிறப்பு முகாம்! தேர்தல் ஆணையம் அப்டேட்!