• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, October 07, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    கோவை, நீலகிரி, தேனி மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் தகவல்!

    கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள் மற்றும் நீலகிரி தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
    Author By Thenmozhi Kumar Tue, 06 Oct 2026 14:45:40 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tamil Nadu Weather: Heavy Rain Alert for Nilgiris, Coimbatore & Theni Due to Trough & Upper Air Circulation.

    அரபிக்கடல் மற்றும் வடதமிழகப் பகுதிகளில் நிலவும் இரண்டு வளிமண்டல மேலடுக்கு சுழற்சிகள் மற்றும் மன்னார் வளைகுடா முதல் மகாராஷ்டிரா வரை நீடிக்கும் காற்றழுத்தத் தாழ்வுப் பாதை காரணமாக, கோவை மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வ எச்சரிக்கை விடுத்துள்ளது.

    சென்னை மண்டல வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டலத் தலைவர் சார்பில் விஞ்ஞானி முனைவர் வி.ஆர். துரை இன்று (06-10-2026) மதியம் 1:10 மணிக்கு வெளியிட்டுள்ள விரிவான வானிலை அறிக்கையில், தமிழகத்தில் நிலவும் வளிமண்டல அமைப்புகள் மற்றும் அடுத்த ஏழு தினங்களுக்கான மழை முன்னறிவிப்புகள் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன.

    தற்போது வளிமண்டலத்தில் மூன்று முக்கிய வானிலை அமைப்புகள் ஒரே நேரத்தில் நிலவி வருகின்றன. சுமார் 5.8 கி.மீ உயரத்தில் தெற்கு கேரளக் கடலோரப் பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல சுழற்சியும், அதே 5.8 கி.மீ உயரத்தில் வடதமிழகப் பகுதிகளின் மேல் மற்றொரு வளிமண்டல சுழற்சியும் நிலை கொண்டுள்ளன. மேலும், சுமார் 0.9 கி.மீ உயரத்தில் மன்னார் வளைகுடா தொடங்கித் தமிழகம் மற்றும் உள் கர்நாடகா வழியாக மத்திய மகாராஷ்டிரா வரை ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நீடித்து வருகிறது.

    இதையும் படிங்க: 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    heavy rain

    இவற்றின் கூட்டுத் தாக்கத்தால், இன்று (அக். 6) கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் மணிக்கு 40 முதல் 50 கி.மீ வேகத்தில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

    அதேபோல் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், ராமநாதபுரம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 23 மாவட்டங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏனைய தமிழகப் பகுதிகளில் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

    நாளை (அக். 7) மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மற்றும் தென் மாவட்டங்கள், சேலம், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழையும், அக்டோபர் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் கோவை மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் மீண்டும் கனமழையும் நீடிக்கும். அக்டோபர் 10 அன்று கோவை மலைப்பகுதிகள் மற்றும் தேனியில் கனமழை தொடர வாய்ப்புள்ளது; தொடர்ந்து அக்டோபர் 11 மற்றும் 12 தேதிகளில் தென் தமிழகத்தில் மிதமான மழையும், வடதமிழகம் மற்றும் புதுவையில் லேசான மழையும் பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைப் பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 முதல் 36 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும்.

    கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் வால்பாறை PAP, வால்பாறை தாலுகா அலுவலகம் மற்றும் தர்மபுரி மாவட்டம் நம்மாண்டஅள்ளியில் தலா 12 செ.மீ மிகக் கனமழை கொட்டித் தீர்த்துள்ளது. மேலும் சின்கோனா, ஏழுபட்டியில் தலா 11 செ.மீ மழையும், சின்னக்கல்லாரில் 8 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது. சமவெளிப் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலையாக மதுரை விமான நிலையத்தில் 38.0 டிகிரி செல்சியஸும், குறைந்தபட்ச வெப்பநிலையாகத் திருப்பத்தூரில் 21.7 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.

    மீனவர்களுக்கான எச்சரிக்கையைப் பொறுத்தவரை, தமிழகக் கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் அக்டோபர் 12 வரை மீனவர்களுக்கு எவ்வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    இதையும் படிங்க: 5 மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழை வெளுத்து வாங்கும்! சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share