சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியபோது, மாநிலத்தில் சுயாட்சி, மத்திய கூட்டாட்சி என்பதை திமுக ஏற்றுக் கொண்டு இருப்பதாக தெரிவித்தார். அனைத்து மாநிலங்களுக்கும் தமிழ்நாடு வழிகாட்டியாக இருந்து வருகிறது என்று பெருமிதம் தெரிவித்துள்ளார். நிதி உரிமைக்காக தமிழ்நாடு இன்னமும் போராட வேண்டிய நிலைதான் இருக்கிறது என்று கூறினார். அனைத்து மாநிலங்களும் சுயாட்சியை பெற்று இருக்க வேண்டும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மாநில சுயாட்சி கொள்கையை அரசியல் எல்லைகளைக் கடந்து அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், மாநில உரிமைகள் பறிக்கப்பட்டு அடிப்படை உரிமையை மத்திய அரசிடம் போராடி பெற வேண்டிய இக்கட்டான நிலையில் இருக்கிறோம் என்று கூறி இருந்தார். இந்த நிலையில், ஓராண்டு காலமாக 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல் உள்ளாட்சிகளுக்கான உரிமையை பறித்து மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் அதிகாரிகளை வைத்து நிர்வாகம் செய்து கொண்டிருக்கும் முதலமைச்சர் ஸ்டாலின் இன்று மாநில சுயாட்சியை பற்றி பேசுகிறார் என்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

தான் ஆளும் தமிழ்நாட்டில் மாநிலத்திற்கு உள்ளாக உள்ள முறையான அதிகார பகிர்வை., அதாவது உள்ளாட்சிகளுக்கு உரிமை கொடுக்க முடியாதவர்… எல்லா மாநிலங்களுக்கும் சமமாக தனது நிர்வாகத்தை எந்த பாராபட்சமும் இல்லாமல் நடத்திக் கொண்டிருக்கும் மத்திய அரசை பார்த்து குறை கூறிக் கொண்டிருக்கிறார் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தாமரை மலரும்.. தமிழகம் மாறும்! போதைப்பொருள் விவகாரத்தில் திமுகவை வெளுத்து வாங்கிய தமிழிசை!
தேர்தலில் வளர்ச்சி சொல்லி வாக்கு கேட்க முடியாத திராவிட முன்னேற்ற கழகம், மாநில சுயாட்சி என்று முதலில் கோரிக்கை வைத்து பின்பு தாங்கள் மத்தியில் ஆட்சியில் வரும்பொழுது அதை எல்லாம் மறந்து இன்று மறுபடியும் தோல்வி பயம் வரும் பொழுது இதைப் போன்ற கோரிக்கைகளை கையில் எடுக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். திமுகவின் தோல்வி பயத்தையே இது காண்பிக்கிறது என்றும் விமர்சித்தார்.
இதையும் படிங்க: “இது அதிமுகவோட கோட்டை...” - பாஜக மேடைக்கு கீழ் இருந்து அதிமுக தொண்டர் கொடுத்த ரிப்ளே... ஷாக்கான அமர் பிரசாத் ரெட்டி...!