மதுரை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தனது சுற்றுப்பயணத்தின் போது உரையாற்றியதை விமர்சித்தார். விஜய்க்கு ஸ்கிரிப்ட் எழுதி கொடுப்பவர்கள் பார்த்து எழுதிக் கொடுக்க வேண்டும் என்றும் விஜய் தனது வசன கர்த்தாவை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும் விமர்சித்துள்ளார்.
பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 3,700 மீனவர்கள் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் ஆறு மீனவர்கள் தூக்கு தண்டனையிலிருந்து காப்பாற்றப்பட்டு இருக்கிறார்கள் எனவும் மீனவர்களின் உயிரிழப்பை தடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். கூறினார். 75 ஆயிரம் ரயில் பெட்டிகள் வந்தே பாரத்திற்காக பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், 69 வந்தே பாரத் ரயில்கள் பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் உருவாக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், முதலீட்டை ஈர்க்க முதலமைச்சர் வெளிநாடு செல்கிறாரா அல்லது முதலீடு செய்ய முதலமைச்சர் வெளிநாடு செல்கிறாரா என்ற விஜயின் கருத்தில் தனக்கு உடன்பாடு இருப்பதாகவும், திமுக எதிர்ப்பை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். ஆளும் திமுக அரசை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்று கூறிய தமிழிசை சௌந்தரராஜன், ஷூட்டிங்கில் இருந்து விஜய் அரசியலுக்கு வந்து விட்டார் என்றும் அரசியலில் இருந்து முதலமைச்சர் ஷூட்டிங்கிற்கு சென்று விட்டார் எனவும் விமர்சித்துள்ளார்.
இதையும் படிங்க: TIME OVER... திமுகவுக்கு நேரம் நெருங்கிடுச்சு! எச்சரித்த தமிழிசை
விஜய் திமுக எதிர்ப்பை தீவிர படுத்த வேண்டும் என்றும் அதே சமயம் நல்லாட்சி நடத்திக் கொண்டிருக்கும் பாஜகவை விஜய் எதிர்ப்பதில் எந்த அர்த்தமும் இல்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை, நிரந்தர எதிரியும் இல்லை... TTV குறித்த கேள்விக்கு நைனார் சூசக பதில்!