தமிழக அரசு நகர்ப்புற உள்கட்டமைப்பு மேம்பாட்டில் முக்கிய படியாக பாதாள சாக்கடை திட்டங்களை தனியார் பங்களிப்புடன் செயல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளது. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு நகர்ப்புற உள்கட்டமைப்பு நிதிச் சேவைகள் நிறுவனம் மூலம் மதுரை மற்றும் நாகர்கோவில் மாநகராட்சிகளில் இந்தத் திட்டங்களை அரசு - தனியார் கூட்டாண்மை முறையில் மேற்கொள்வதற்கான ஆலோசகர் நியமனத்திற்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இது நகரங்களில் கழிவுநீர் மேலாண்மையை மேம்படுத்தி பொது சுகாதாரத்தை உயர்த்தும் நோக்கத்துடன் முன்னெடுக்கப்படுகிறது.தற்போது மாநிலத்தில் பல்வேறு மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் பாதாள சாக்கடை திட்டங்கள் அரசு நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. ஆனால் நிதி சுமையைக் குறைத்து திறமையான செயல்பாட்டை உறுதிசெய்ய தனியார் முதலீட்டை ஈர்க்கும் வகையில் புதிய அணுகுமுறை கையாளப்படுகிறது.

முதற்கட்டமாக மதுரை மற்றும் நாகர்கோவில் ஆகிய இரு மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மதுரையில் ஏற்கனவே உள்ள பாதாள சாக்கடை மற்றும் கழிவுநீர் அமைப்புகளை மேம்படுத்துதல், புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் கழிவுநீர் சேகரிப்பு வசதிகளை ஏற்படுத்துதல் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்தல் போன்ற பணிகள் இதில் அடங்கும்.
இதையும் படிங்க: அமைச்சரவை மாற்றம்..! புது முகங்களுக்கு வாய்ப்பு.? எகிறும் எதிர்ப்பார்ப்பு.!!
இந்த ஆலோசனைப் பணிக்கான ஒப்பந்தப்புள்ளியில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் ஐம்பதினாயிரம் ரூபாய் முன்வைப்புத் தொகை செலுத்தி மின்னணு முறையில் விண்ணப்பிக்கலாம். ஒப்பந்தப்புள்ளி ஆவணங்களை செப்டம்பர் இருபத்தெட்டாம் தேதி முதல் அக்டோபர் பதினைந்தாம் தேதி வரை பதிவிறக்கம் செய்யலாம். முன் ஒப்பந்தப்புள்ளி கூட்டம் செப்டம்பர் முப்பதாம் தேதி நடைபெறவுள்ளது. ஒப்பந்தப்புள்ளிகளை சமர்ப்பிக்க அக்டோபர் பதினைந்தாம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதியோர் ஓய்வூதியத்திற்கு ஆதார் கட்டாயமா? மூத்த குடிமக்கள் அவதி... சிபிஎம் கண்டனம்!