வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

அரசியலில் இன்னும் கத்துக்குட்டி.. பாஜவுக்கு முரட்டு அடிமை என விமர்சித்த உதயநிதிக்கு இபிஎஸ் தக்க பதிலடி..!!

அதே கூட்டணியில் இருந்த தன்னுடைய தாத்தாவைப் பார்த்து என்னவென்று உதயநிதி சொல்வார்? என எடப்பாடி கேள்வி எழுப்பியுள்ளார்.

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, பொன்னேரி சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற எழுச்சிப் பயணப் பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். அங்கு மக்கள் ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் வரவேற்றதை அவர் தனது எக்ஸ் (முன்னாள் ட்விட்டர்) பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் தன்னை (எடப்பாடி பழனிசாமியை) "பாரதிய ஜனதாவுக்கு முரட்டு அடிமை" என்று விமர்சித்ததற்கு கடும் எதிர்வினை ஆற்றியுள்ளார். "என்னை முரட்டு அடிமை என்று அழைக்கிறாரே உதயநிதி… அப்படியானால், அதே கூட்டணியில் இருந்த தனது தாத்தா கருணாநிதியைப் பார்த்து என்ன சொல்வார்? எந்தப் பட்டத்தை அவருக்கு அளிப்பார்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும், உதயநிதி ஸ்டாலின் தனது தாத்தாவை நேரடியாக விமர்சிக்க முடியாமல், தனது (எடப்பாடியின்) பெயரைப் பயன்படுத்தி மறைமுகமாக தாத்தாவைப் பற்றி பேசுவதாகவும் குற்றம்சாட்டியுள்ளார். "அரசியலில் இன்னும் கத்துக்குட்டியாக இருக்கும் உதயநிதி ஸ்டாலின், பேசும்போது கவனமாக இருக்க வேண்டும்" என்று அறிவுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க: குடும்ப ஆட்சியா? வாரிசு அரசியலா? ஸ்டாலினை ‘மன்னர் ஆட்சி’ என சாடிய எடப்பாடி பழனிசாமி!

அதேசமயம், ஸ்டாலின் குடும்பம் தற்போது உலகின் மிகப் பணக்கார குடும்பங்களில் ஒன்றாக விளங்குவதைச் சுட்டிக்காட்டி, "இத்தகைய குடும்ப ஆட்சி தமிழகத்திற்குத் தேவையா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். குடும்ப அரசியல், வாரிசு அரசியலை வேரறுப்பது தான் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலின் முக்கிய நோக்கம் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக மக்கள் இத்தகைய வாரிசு ஆட்சியை ஏற்க மாட்டார்கள் என்றும், அடுத்த சட்டமன்றத் தேர்தலில் அதை முற்றிலும் வீழ்த்தி விடுவார்கள் என்றும் எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு, அதிமுகவின் தேர்தல் பிரச்சாரத்தில் குடும்ப அரசியலுக்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்துவதாக அமைந்துள்ளது.
 

இதையும் படிங்க: வட மாவட்டங்களுக்கு டார்கெட்..!! அதிரடியாக களத்தில் இறங்கிய இபிஎஸ்..!! சூடுபிடிக்கும் பிரச்சாரம் ஸ்டார்ட்..!!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी