வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு ›

கழுத்தை நெரித்த கந்துவட்டி கொடுமை..! இளைஞர் தற்கொலை செய்துகொண்ட சோகம்..!

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கந்து வட்டி கொடுமையால் இளைஞர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அடுத்த குள்ளனூர் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் என்பவரது மகன் மரகதவேல். ஓட்டுநரான இவர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட நிலையில் மனைவி மற்றும் ஆறு மாத குழந்தை உள்ளது. இந்த நிலையில் இவர் தனது தேவைக்காக பனங்காட்டூரைச் சேர்ந்த ஜெயகாந்தன் மற்றும் குள்ளனூர் கிராமத்தைச் சேர்ந்த கமல் ஆகியோரிடம் வட்டிக்கு கடன் வாங்கியதாக தெரிகிறது. வாங்கிய பணத்தை திருப்பி கொடுத்தும் கூடுதலாக பணம் கேட்டு தொல்லை கொடுப்பதாகவும் கடிதம் ஒன்றை எழுதிவிட்டு மரகதவே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

இந்த நிலையில் அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன. மேலும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய ஜெயகாந்தன் மற்றும் கமல் ஆகிய இருவரும் தலைமறைவாகியுள்ள நிலையில் போலீசார் தேடி வருகின்றனர். 

இதையும் படிங்க: தேனியில் துணிகரச் சம்பவம்.. நிலத்தகராறில் நிகழ்ந்த இரட்டைக்கொலை..!

இதனிடையே குற்றவாளிகளை கைது செய்யும் வரை தனது உடலை பெற்றோர் வாங்கக்கூடாது என்ற கோரிக்கையும் மரகதவேல் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தலையை சிதைத்து நர்ஸ் கொடூர கொலை.. சிசிடிவியால் சிக்கிய கணவன்..!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள் ›

தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी