வெள்ளிக்கிழமை, 6 நவம்பர் 2026
தமிழ்நாடு

விடிந்ததுமே இப்படியொரு அதிர்ச்சியா?… நடுக்கடலில் இலங்கை கடற்படை அட்டூழியம்… கொந்தளிப்பில் தமிழக மீனவர்கள்…!

ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் ஒன்பது பேரையும் ஒரு படகை இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது.

ராமேஸ்வரம் மீன் பிடித்து துறைமுகத்திலிருந்து மீன் பிடிப்பதற்கான அனுமதி சீட்டு பெற்று ஏராளமான மீனவர்கள் நேற்று மாலை கடலுக்கு மீன் பிடிக்க சென்று கச்சத்தீவு – தலைமன்னார் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டியதாக கூறி ஒரு படகையும் அதில் இருந்த ஒன்பது மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி கைது செய்து விசாரணை நடத்தி இன்று நீதிமன்றத்தில் ஆச்சரியப்படுத்தி சிறையில் அடைக்க உள்ளனர்.

இந்த சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்கள் மற்றும் மீனவ குடும்பத்தில் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது. ராமேஸ்வரத்திலிருந்து மீன் பிடிக்க செல்லும் ராமேஸ்வரம் மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ச்சியாக சிறை பிடிப்பது வாடிக்கை நிகழ்வாக உள்ளது.

இதையும் படிங்க: தமிழக அரசுக்கு இடியை இறங்கிய மீனவர்கள்… ராமேஸ்வரத்தில் இன்று தடாலடி மாற்றம்… ஒரே நாளில் இவ்வளவு நஷ்டமா?

இதை தடுக்க வேண்டிய மத்திய மாநில அரசுகள் எந்தவித நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது. புதிதாக அமைந்த அரசு மீனவர் பிரச்சனை தீர்ப்பதாக வாக்குறுதி கொடுத்த நிலையில் தொடர்ந்து ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிக்கும் நிலையில் மீனவர் பிரச்சனை குறித்து இதுவரை மத்திய அரசுக்கும் இலங்கை அரசுக்கும் எந்தவித அழுத்தமும் கொடுக்காமல் வேடிக்கை பார்த்து வருகிறது .

எனவே தமிழக அரசு மத்திய அரசுடன் பேசி மீனவர்கள் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இலங்கை கடற்படை சிறைபிடித்த மீனவர்களையும் படகையும் உடனே விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ சங்கம் கோரிக்கை வைத்துள்ளது.

இதையும் படிங்க: #BREAKING விடிந்ததுமே பேரதிர்ச்சி… நடுக்கடலில் தமிழக மீனவர்களுக்கு நடந்த கொடூரம்… இலங்கை கடற்படை அட்டூழியம்…!

மேலும் படிங்க

சமீபத்திய செய்திகள்

அனைத்தும்
தீபாவளிக்கு முன்பே போராட்ட அறிவிப்பு.. மீண்டும் களமிறங்கும் CJP..!! நவ. 7ல் என்ன நடக்கப்போகிறது?இந்தியா
களத்தில் அதிரடி காட்டும் ஜான் ஒசாஃப்.. அமெரிக்காவின் அடுத்த ஒபாமாவாக உருவெடுப்பாரா? ஜார்ஜியா தேர்தல் வெற்றி சொல்வது என்ன?உலகம்
தீபாவளிக்கு முன்பே டெல்லியை வாட்டப்போகும் காற்று மாசு.. தரம் மோசமடையும்..!! வானிலை கணிப்பு!இந்தியா
ஆசிய பாரா போட்டியில் 114 பதக்கங்கள்: சாதித்த வீரர்களுக்கு பிரதமர் மோடி பாராட்டு!இந்தியா
விவாதம் செய்ய நாங்கள் தயார்: ராகுல் காந்திக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா அதிரடி சவால்!இந்தியா
600 சைபர் புகார்கள், ₹400 கோடி மோசடி: போலி வங்கி கணக்கு கும்பலை வளைத்து பிடித்த அமலாக்கத்துறை!தமிழ்நாடு
© 2026 Skycast Media Network Pvt Ltd, or its affiliated brands and companies. All rights reserved. TamilWire® is a registered trademark of Skycast Media Network Pvt Ltd. English · हिंदी