×
 

தென்னாட்டின் ஜான்சி ராணி அஞ்சலை அம்மாளுக்கு தவெக தலைவர் விஜய் மலரஞ்சலி!

தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினமான இன்று, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பனையூரில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தமிழக விடுதலைப் போராட்ட வரலாற்றில் வீரத்திற்கும், தியாகத்திற்கும் இலக்கணமாகத் திகழ்ந்த "தென்னாட்டின் ஜான்சி ராணி" தியாகி அஞ்சலை அம்மாள் அவர்களின் நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமைக் கழக அலுவலகத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய், அஞ்சலை அம்மாள் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் தனது வீரவணக்கத்தைச் செலுத்தினார்.

சுதந்திரப் போராட்டக் களத்தில் தமிழகத்தின் வீர முகமாகத் திகழ்ந்தவர் அஞ்சலை அம்மாள். மகாத்மா காந்தியாலேயே "தென்னாட்டின் ஜான்சி ராணி" என்று போற்றப்பட்ட அவரது வீரமும், துணிச்சலும் இன்றும் நமக்கு மிகப்பெரிய ஊக்கமளிப்பவை. தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக அஞ்சலை அம்மாள் போற்றப்படுகிறார். நீராதாரத்திற்காகவும், விளிம்பு நிலை மக்களின் உரிமைகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்கள் காலத்தால் அழியாதவை.

போராட்டக் களத்தில் பெண்களால் எதையும் சாதிக்க முடியும் என்பதை அன்றைய காலத்திலேயே நிரூபித்துக் காட்டியவர். சமூக சேவையிலும், நாட்டுப் பணியிலும் தன் வாழ்வையே முழுமையாக அர்ப்பணித்த உன்னதமான தியாகி அவர். தன் வாழ்நாள் முழுவதும் நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் பாடுபட்ட அஞ்சலை அம்மாள் அவர்களின் வழியில் நின்று, தற்போதைய சூழலில் தீய சக்திகளிடமிருந்து தமிழ்நாட்டை மீட்டெடுக்க நாம் அனைவரும் இந்நாளில் உறுதியேற்போம்.

இதையும் படிங்க: விஜய் ஓட்டு வாங்குவார், ஆனா ஜெயிக்க முடியுமா? கார்த்திக் சிதம்பரம் எழுப்பும் அரசியல் கேள்வி!

இந்த நிகழ்வின் போது கட்சியின் தலைமை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாகக் கலந்து கொண்டனர். தமிழக வெற்றிக் கழகம் தனது கொள்கை வழிகாட்டியாக அறிவித்த பெண் ஆளுமைகளில் ஒருவரான அஞ்சலை அம்மாளுக்கு, தேர்தல் நெருங்கும் வேளையில் விஜய் செலுத்தியுள்ள இந்த மரியாதை அரசியல் வட்டாரத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

இதையும் படிங்க: உங்க விஜய்.. நான் வரேன்..!! வேலூர் மக்கள் சந்திப்புக்கு 20 நிபந்தனைகள்..!! கண்டிஷன் போட்ட போலீசார்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share