தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வந்தது பேசு பொருளாக மாறிய நிலையில் தற்போது ஆளுநர் உரையை வாசித்து முடித்தார்.
"மக்களே ஜனநாயகத்தின் நாயகர்’’ என்ற பேரறிஞர் அண்ணாவின் உரையை சுட்டிக்காட்டி, 1967-ல் அண்ணா, 1977-ல் MGR-க்கு பிறகு 2026-ல் வரலாற்று புரட்சி நடந்திருப்பதாக ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தி உள்ளார். தவெகவின் கொள்கை தலைவர்கள் பெயர்களை குறிப்பிட்டும் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் தற்போது நிறைவடைந்த நிலையில் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் தமிமுன் அன்சாரி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுகவின் கொள்கைகளை தமிழக வெற்றி கழகம் அப்படியே வழிமொழிகிறது என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: திமுக திட்டங்களை மறைத்தால் பதிலடி கொடுங்கள்! எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் உத்தரவு!
சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசின் பக்கம் தமிழக வெற்றிக்கழக அரசு தள்ளிவிட்டு உள்ளதாக குற்றம் சாட்டினார். சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது., அதைத்தொடர்ந்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது குறித்து கேள்வி எழுப்பப்பட்ட நிலையில், தானும் அது பற்றி யோசித்ததாகவும், எதற்காக இந்த நடைமுறை என்பது குறித்து விசாரிப்போம் என்றும் தெரிவித்தார். திராவிட இயக்கத்தின் தத்துவ அரசியலை தாண்டி இவர்களால் எங்கும் செல்ல முடியாது என்பதை தான் இன்றைய ஆளுநர் உரை அமைந்திருக்கிறது என்று தெரிவித்தார். ஆளுநர் உரை என்பது சடங்கு ரீதியான செயல்பாடு என்று குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: "பாலியல் குற்றவாளிகளை சுட்டு தள்ள வேண்டும்!" - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் ஆவேசம்!