தமிழக வெற்றி கழக தலைவர் நடிகர் ஜோசப் விஜய் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற சில நாட்களுக்குள், அரசின் முதல் முக்கிய நிர்வாக நடவடிக்கையாக 717 டாஸ்மாக் மதுபானக் கடைகளை மூட உத்தரவிட்டார். இந்த உத்தரவு மே 12 அன்று பிறப்பிக்கப்பட்டது. கோவில்கள், பள்ளிகள், கல்லூரிகள், பேருந்து நிலையங்கள் போன்ற பொது இடங்களுக்கு அருகில் 500 மீட்டர் தொலைவுக்குள் இயங்கும் கடைகளை இலக்காகக் கொண்டது இந்த நடவடிக்கை. இரண்டு வார கால அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், பல கடைகள் இன்னும் முழுமையாக மூடப்படாத சூழல் உருவாகியுள்ளது.
முதல்வர் விஜய் பொதுமக்கள் நலன் கருதி இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டது. மொத்தம் 4,765 டாஸ்மாக் கடைகளில் 717 கடைகள் இந்த வரம்புக்குள் இருப்பதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்தது. இதில் 276 கடைகள் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலும், 186 கடைகள் கல்வி நிறுவனங்களுக்கு அருகிலும், 255 கடைகள் பேருந்து நிலையங்களுக்கு அருகிலும் அமைந்துள்ளன.

தேர்தல் வாக்குறுதியின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை கருதப்படுகிறது. தமிழ்நாட்டை மது மற்றும் போதைப் பொருட்கள் இல்லாத மாநிலமாக மாற்றும் நோக்கத்துடன் இது எடுக்கப்பட்ட முதல் பெரிய அடியாகப் பார்க்கப்படுகிறது. உத்தரவு பிறப்பிக்கப்பட்ட உடனேயே அதிகாரிகள் கள ஆய்வில் ஈடுபட்டனர். சில மண்டலங்களில் கடைகள் மூடப்பட்டன. சென்னை, சேலம், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட பகுதிகளில் ஆரம்ப நாட்களில் பல கடைகள் அடைக்கப்பட்டன.
இதையும் படிங்க: எத்தனை டாஸ்மாக்கை நிரந்தரமா மூடியிருக்கீங்க? சொல்லுங்க?! விஜய்யிடம் வெள்ளை அறிக்கை கேட்கும் நயினார் நாகேந்திரன்!
இருப்பினும் பல்வேறு மது கடைகள் என்னும் மூடப்படாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் விஜய் மதுக்கடைகள் மூடப்படுவதை உறுதி செய்யும் வகையில் இன்று ஆலோசனை நடத்தி வருகிறார். இன்னும் ஏன் பல மது கடைகள் மூடப்படாமல் இருக்கிறது என்று கேள்வி எழுப்பி வருகிறார். மேலும் பாட்டிலுக்கு பத்து ரூபாய் வசூலிக்கப்படும் விவகாரம் தொடர்பாகவும் முதல்வர் விஜய் கேட்டறிந்து வருகிறார்.
இதையும் படிங்க: டாஸ்மாக்கில் கூடுதலாக ரூ.10 வசூலிப்பு!! கண்காணிக்கும் உளவுத்துறை போலீசார்! சைலண்டாக பறந்த உத்தரவு!