தமிழ்நாட்டின் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கன்னிகைபேர் பகுதியில், பெரியபாளையம் அருகே அமைந்துள்ள ஒரு இறால் பதப்படுத்தும் ஆலையில் ஏற்பட்ட அம்மோனியா வாயு கசிவு, பல உயிர்களை பலியெடுத்த பேரழிவாக மாறியது. ஜூன் 21, 2026 அன்று நிகழ்ந்த இந்த சம்பவம், தொழிற்சாலை பாதுகாப்பு நடைமுறைகளின் பலவீனங்களை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்தியது. முக்கியமாக ஒடிஷா மற்றும் அசாம் மாநிலங்களைச் சேர்ந்த இளம் பெண் தொழிலாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்ட இந்த விபத்து, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
முதலில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. பின்னர் நாட்கள் செல்லச் செல்ல இறப்பு எண்ணிக்கை உயர்ந்து கொண்டே போனது. இறுதியில் பல உயிரிழப்புகள் பதிவாகின. இந்த சம்பவத்துக்குப் பிறகு ஆலை உரிமையாளர் மற்றும் மேலாளர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது ஏற்கெனவே தொழில்துறை பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய வழக்குகள் இருந்ததாகக் கூறப்படுகிறது.

முதலமைச்சர் உத்தரவின் பேரில் மூன்று உறுப்பினர் கொண்ட விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் திருவள்ளூரில் மீண்டும் ஒரு அமோனியா வாயுகசிவு சம்பவம் நிகழ்ந்திருப்பது பதற்றத்தை அதிகரித்துள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள மதுபான ஆலையில் அமோனியா வாயுகசிவு ஏற்பட்டுள்ளது. இதில் ஐந்து பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக முதற்கட்ட தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையும் படிங்க: 18 உயிர்களை பலிகொண்ட இறால் தொழிற்சாலை! நச்சு அமோனியாவை அகற்றும் பணி 2வது நாளாக துவக்கம்!
அமோனியா வாயு கசிந்ததில் ஐந்துக்கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. திருவள்ளூர் கன்னிகைபேரில் இறால் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டு பலர் பலியான நிலையில் மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்திருக்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.
இதையும் படிங்க: அம்மோனியா வாயுக் கசிவு..! அடுத்தடுத்து பறிபோகும் உயிர்கள்..!! பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு..!!