அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், பிரதமர் மோடியிடம் நேற்று பேசுகையில் தெற்காசிய சந்தைகளில் போர்போர்ன் மதுவுக்கு நியாயமற்ற வகையில் வரிவிதிக்கப்படுகிறது எனத் தெரிவித்திருந்தா். அவர் கூறிய சில நாட்களுக்குள் இந்தியா சுங்க வரியைக் குறைத்துள்ளது. இந்த சுங்கவரிக் குறைப்பு அறிவிப்பு பிப்ரவரி 13ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்படும், அதாவது அதிபர் டொனால்ட் ட்ரம்பை பிரதமர் மோடி சந்திப்பதற்கு முன்பே இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி போர்பான் விஸ்கிக்கு அடிப்படை சுங்கவரி 50%, கூடுதல் வரியாக 50% என 100% சுங்கவரி குறைக்கப்பட்டுள்ளது.

முன்பு 150% சுங்கவரி விதிக்கப்பட்டிருந்தது. போர்பர்ன் விஸ்கியை இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்வதில் அமெரிக்கா முக்கிய பங்குவகிக்கிறது. இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யும் விஸ்கியில் நான்கில் ஒரு பங்கு டெல்லிக்கு அனுப்பப்படுகிறது என்று பிடிஐ ஏஜென்சி செய்தி தெரிவித்துள்ளது. 2023-24ம் ஆண்டு மட்டும் போர்பர்ன் விஸ்கியை 25 லட்சம் டாலர்களுக்கு இந்தியா இறக்குமதி செய்துள்ளது. பிரதமர் மோடி, அதிபர் ட்ரம்ப் இடையிலான பேச்சுவார்த்தையில் இருதரப்பு வர்த்தகத்தையும் 50000 கோடி டாலர்களுக்கு 2030 ஆண்டுக்குள் உயர்த்துவோம் என்று தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: இப்படியும் ஒரு காதல்.. சிறையில் இருந்தபடி காதலிக்கு "ஜெட் விமானம்" பரிசளித்த காதலர்..

போர்பர்ன் விஸ்கி குறித்த 5 அம்சங்கள்: போர்பர்ன் விஸ்கி அமெரிக்காவில் தயாரிக்கப்படும் மதுபானமாகும். மக்காச்சோளம், அரிசி, கோதுமை மற்றும் மால்ட் ஆகியவற்றிலிருந்து இந்த விஸ்கி தயாரிக்கப்படுகிறது. இந்த விஸ்கில் 51 சதவீதம் மக்காச்சோளத்தின் பங்கு இருக்கும். 1964ம் ஆண்டு அமெரிக்க நாடாளுமன்றம், போர்பர்ன் விஸ்கியை அமெரிக்காவின் தனித்துவமான தயாரிப்பு எனத் தெரிவித்தது.

போர்பனின் விஸ்கி தயாரிப்பு என்பது, இதற்கு முன்பு பயன்படுத்தப்படாத ஒரு புதிய வெள்ளை ஓக் பீப்பாயில் பழமையாக்கப்பட வேண்டும். போர்பன் விஸ்கி என்று அழைக்க, அதில் எந்த கூடுதல் நிறமோ அல்லது சுவையோ இருக்கக்கூடாது. 80 முதல் 160 வரை ஆல்கஹாலின் சதவீதம் இருக்க வேண்டும். 1800களில் முதன்முதலாக போர்பர்ன் விஸ்கி அமெரிக்காவின் கென்டகி மாகாணத்தில் போர்பர்ன் நகரில் தயாரிக்கப்பட்டது.

அதன்பின் இந்த போர்பர்ன் விஸ்கி அமெரிக்காவில் மட்டும் தயாரிப்பாக மாறியது. போர்பர்ன் விஸ்கியைத் தயாரிக்க கண்டிப்பாக இதற்கு முன் பயன்படுத்தப்படாத பீப்பாய்கள் தேவை. 'ஓல்ட் ஃபேஷன்' மதுவிலிருந்து 'மன்ஹாட்டன்' மது, 'மின்ட் ஜூலெப்' வரையிலான மதுவகைகளுக்கு போர்பர்ன் விஸ்கி பயன்படுத்தப்படுகிறது. வெண்ணிலா, ஓக் மற்றும் கேரமல் ஆகியவற்றின் சுவைகளிலும், பல்வேறு காக்டெய்ல்களிலும் போர்பர்ன் விஸ்கி தயாரிக்கப்படுகிறது.
இதையும் படிங்க: மனக்கோட்டை கட்டி வைத்த பிரேமலதா… மனவலியை கொடுக்கும் எடப்பாடியார்… நெருக்கடியில் அதிமுக..!