தெலங்கானா மாநில ஆர்.டி.சி. தொழிலாளர்கள் சங்கத்தினர் ஆர்.டி.சி-யை அரசுடன் இணைக்க வேண்டும், அரசே மின்சாரப் பஸ்களை வாங்கி ஆர்.டி.சி-க்கு வழங்க வேண்டும் , மகாலட்சுமி ( பெண்களுக்கான இலவச பயணத்திற்கான ) நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளர்களை உடனடியாக போக்குவரத்து கழகத்தில் இணைக்க வேண்டும், தொழிற்சங்கத் தலைவர்கள் மீதான கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று பல்வேறு கோரிக்கை விடுத்தனர்.
இந்த கோரிக்கைகள் தொடர்பாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்ட போதிலும், அது பயனற்றதாகவே முடிந்ததால் போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க கூட்டு நடவடிக்கை குழுவினர் வேலைநிறுத்தத்தை அறிவித்தனர். இதனால் ஆர்.டி.சி பஸ்கள் அனைத்து பஸ் ஸ்டாண்டிற்கு வராமல் அந்தந்த பணிமனையில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் நிறுத்தப்பட்டு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .
இதன் விளைவாக, பயணிகள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். கோடைக்காலம் மற்றும் ஆர்.டி.சி பஸ்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகளின் கடும் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர் . தற்போது சுப நிகழ்வுகள் நடைபெற்று வரும் சூழ்நிலையில், பெண்கள் ஆர்.டி.சி பஸ்களில் மற்ற இடங்களுக்குப் பயணிக்கின்றனர். மேலும், அரசு கொண்டு வந்த மகாலட்சுமி திட்டத்தின் காரணமாக, பெண்களே பெரும்பாலும் ஆர்.டி.சி பஸ்களில் பயணிக்கின்றனர். வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து, எல்லா இடங்களிலும் பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பெண்கள் தங்கள் பயணங்களைத் தள்ளிப்போட வேண்டியுள்ளது.
இதையும் படிங்க: ஈரானுக்கு நெருக்கடி!! 27 கப்பல்களை திருப்பி அனுப்பிய அமெரிக்கா! ஒரு கப்பலை சுட்டு பிடித்ததாகவும் அறிவிப்பு!
மகாலட்சுமி திட்டம் பெண்களுக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்துள்ளது. இந்தநிலையில் வேலைநிறுத்தம் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் பெண்களிடமிருந்தே வரும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும், ஆர்.டி.சி-க்கு புதிய வசதிகளை வழங்கவும் தொழிற்சங்கத்தினர் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சட்டமன்றத் தேர்தல்..! ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பதட்டமான வாக்குச்சாவடிகள்..! தலைமை தேர்தல் அதிகாரி விளக்கம்..!