பாஜகவின் தமிழகப் பயணம் 1980களின் முற்பகுதியில் தொடங்கியது. அப்போது இந்தியாவின் பிற பகுதிகளில் வேரூன்றிய இக்கட்சி, தமிழகத்தில் திராவிட அரசியலின் சவால்களை எதிர்கொண்டது. 1984 லோக்சபா தேர்தலில் வெறும் இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டு தோல்வியடைந்தாலும், 1996இல் கன்னியாகுமரி மாவட்டத்தில் சி. வேலாயுதம் என்பவரை எம்எல்ஏ ஆக்கியது அதன் முதல் மைல்கல். இது மிகுந்த சமூக பிரச்சினைகள், குறிப்பாக கிறிஸ்தவர்களுக்கும் இந்துக்களுக்கும் இடையிலான மோதல்களைப் பயன்படுத்தியதன் விளைவு.
தேசிய ஜனநாயகக் கூட்டணி உருவான 1998க்குப் பின், பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, 1999, 2004, 2014 தேர்தல்களில் சில இடங்களைப் பெற்றது. ஆனால், திராவிட இயக்கத்தின் சமூக நீதி, தமிழ் அடையாளம் மற்றும் மத்திய அரசுக்கு எதிரான உணர்வுகள், பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்தன. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக உடனான கூட்டணியிலும், பாஜக தனித்து ஒரு தொகுதியை மட்டுமே வென்றது.

இதனிடையே, 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு உள்துறை அமைச்சர் அமித் ஷா, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியுடன் கூட்டணி மீண்டும் அறிவித்தார். எப்படியாவது தமிழகத்தில் காலூன்ற வேண்டும் என்ற முனைப்பில் பாஜக செயல்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கோவில் நிதியில் வணிக வளாகம்? ... உடனே சுற்றறிக்கை அனுப்புங்க... அறநிலையத்துறைக்கு அதிரடி உத்தரவு...!
தமிழகத்தில் தாமரை மலராது என்று எதிர் கட்சிகள் விமர்சித்து வருகின்றன. இந்த நிலையில் கோவில் குருக்கள் ஒருவர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. அம்மன் கையில் இருப்பதும் தாமரை தான் என்றும் அனைவரதும் மனதிலும் தாமரை மலர வேண்டும் என்றும் பேசி உள்ளார். இந்த வீடியோக்களை பகிர்ந்த இடதுசாரிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதையும் படிங்க: தப்புண்ணே, பெரிய தப்பு... பாஜக கூட்டத்தில் அதிமுக முன்னாள் அமைச்சருக்கு நடந்த அவமானம்... நயினார் கண் முன்பே நடந்த மோசமான சம்பவம்...!