ஐந்து ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்ற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஓய்வு பெறும் வயதை அடைய ஐந்து ஆண்டுகள் மட்டுமே உள்ள ஆசிரியர்கள் தகுதி தேர்வு எழுத தேவை இல்லை என்று கூறியது. சிறுபான்மை நிறுவனத்தில் டெட் தேர்வை கட்டாயப்படுத்த முடியுமா என்பது குறித்து விசாரிக்க உயர் அமர்வுக்கு வழக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
சிறுபான்மை நிறுவனங்களில் டெட் கட்டாயப்படுத்தினால் உரிமை பாதிக்குமா என்பதை விசாரிக்க உயர் அமர்வுக்கு பரிந்துரைக்கப்பட்டது. மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தகுதி பெறாதோர் வேலையை விட்டு வெளியேறலாம் அல்லது இறுதி சலுகைகளுடன் கட்டாய ஓய்வு பெறலாம் என்றும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஆசிரியர்கள் மத்தியில் சர்ச்சையை கிளப்பியது. இந்த நிலையில், ஆசிரியர்கள் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான அவகாசத்தை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர தேர்ச்சி கட்டாயம் என்ற உத்தரவை எதிர்த்து மறு ஆய்வு செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்களின் 16 ஆண்டுகால போராட்டம்! பிறக்கும் விடிவுகாலம்?! முதல்வர் விஜய் திட்டம்?!
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம் அவகாசத்தை இரண்டு ஆண்டுகளில் இருந்த மூன்று ஆண்டுகளாக நீடித்து உத்தரவு பிறப்பித்தது. ஆகஸ்ட் 31, 2028க்குள் தேர்வை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் அவகாசம் நீட்டிக்கப்படாது எனவும் நீதிபதிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி: தமிழகம் விதித்த தடை செல்லும்..!! சுப்ரீம் கோர்ட்டு அதிரடி உத்தரவு..!!