தமிழகத்தின் பிரதான தொழில்களில் ஒன்று தென்னை விவசாயம். 29 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கரில் தென்னை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெள்ளை ஈ மற்றும் வாடல் நோய் தாக்குதல் அதிகரித்து வருவதன் காரணமாக கடந்த ஓராண்டு காலமாகவே தென்னை மரங்கள் வெட்டி வீழ்த்தப்பட்டு வருவது வேதனையின் உச்சம். பெரும் நஷ்டத்தை சந்தித்து வரும் விவசாயிகள் வேதனையில் ஆழ்ந்துள்ளனர். இதன் காரணமாக இளநீர் மற்றும் தேங்காய் விலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
இந்த நோய் தாக்குதல் மேற்கு மாவட்டங்கள் மற்றும் தெற்கு மாவட்டங்களில் சற்று அதிகரித்து உள்ளதாகவும் விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். தென்னை மரங்கள் வாடல் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார். தமிழகத்தின் பல மாவட்டங்களில், தென்னை விவசாயம் பெருமளவு நடைபெறுகிறது என்றும் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், வாடல் நோய் காரணமாக, தென்னை மரங்கள் பாதிப்புக்குள்ளாகியிருப்பதால், விளைச்சல் மிகவும் குறைந்திருக்கிறது எனவும் தெரிவித்தார். சமீபத்தில் தமிழகம் வந்த மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் தமிழக தென்னை விவசாயிகள் கோரிக்கை வைத்திருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: நகராட்சி நிர்வாகத்துறையில் ரூ.888 கோடி ஊழல்? அம்பலப்படுத்திய ED... அண்ணாமலை கடும் விமர்சனம்...!
இதனிடையே, தென்னை வளர்ச்சி வாரியம் சார்பாக, வாடல் நோய் பாதிப்புகளை ஆய்வு செய்யவும், நோயைக் கட்டுப்படுத்தவும், குழு அமைக்கப்பட்டுள்ளதை வரவேற்பதாக அண்ணாமலை தெரிவித்தார். விவசாயிகள் நலனில் முழு அக்கறை கொண்டுள்ள பிரதமர் மோடிக்கும், மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முதல்வருக்கு மறதி நோய்... SIR விவகாரத்தில் தலையிட்ட அண்ணாமலை...!