சிவனின் மைந்தன் கந்தனுக்கு அறுபடை வீடுகள் இருக்கு. இந்த அறுபடை வீடுகளில் முதலாம் படை வீடாக இருப்பது திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில். இன்றைய தினம் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலுடைய திருக்குட நன்னீராட்டு பெருவிழா நடைபெற்றுள்ளது. இந்த திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவில் திருக்குட நன்னீராட்டு பெருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த வாரம் யாக சாலை பூஜைகளுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. இன்று அதிகாலை 3.30 மணிக்கு 8 ஆம் கால யாக வேள்விகள் நிறைவு பெற்ற நிலையில், யாகசாலையில் இருந்து மங்கள வாத்தியங்கள் முழங்க புனித நீர் ராஜகோபுரத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது.
அதிகாலை 5:25 முதல் 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக, யாகசாலை பூஜைகள் கடந்த ஜூலை 9-ம் தேதி மாலை முதல் தொடங்கின. இந்த பூஜைகள் 8 அமர்வுகளாக நடைபெற்றது. விக்னேஸ்வர பூஜை, புனித நீர் தெளித்தல், மற்றும் ஹோமங்கள் போன்ற சடங்குகள், கோயிலை புனிதப்படுத்துவதற்காக மேற்கொள்ளப்பட்டன.
இதையும் படிங்க: எல்லாம் செந்தில்நாதனை காண.. பக்தர்களால் நிரம்பி வழிந்த திருச்செந்தூர்.. நீண்ட நேரம் காத்திருந்து தரிசனம்..!!
அதிகாலை 5.30 மணியளவில் ராஜகோபுரத்தின் 7 கலசங்களிலும் புனித நீர் ஊற்றப்பட்டு கோலாகலமாக குடமுழுக்கு விழா நடைபெற்றது. அதைத்தொடர்ந்து பக்தர்கள் மீது 10 டிரோன்கள் மூலம் புனித நீர் தெளிக்கப்பட்டது
14 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் அமைச்சர்கள் சேகர்பாபு, மூர்த்தி உட்பட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப் பெருமானை வழிபட்டனர். கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு இன்றும் நாளையும் இரண்டு நாட்கள் கட்டண தரிசனம் கிடையாது .பொது தரிசனம் மட்டுமே என அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார்.
மேலும் வழக்கமாக காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்பட்டு பகல் 1 மணிக்கு நடை சாத்தப்படும்.நிலையில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நடை சாத்துவது ஒரு மணி நேரம் அதிகரிக்கப்பட்டு ஒரு வாரத்திற்கு பிற்பகல் 2 மணிக்கு நடை சாத்தப்படும் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோயிலின் சிறப்பம்சம்:
திருப்பரங்குன்றம் முருகன் கோயில், ஆறுபடை வீடுகளில் முதல் வீடாகக் கருதப்படுகிறது. இது முருகனின் தெய்வானை திருமணம் நடந்த இடமாக பக்தர்கள் நம்புகின்றனர். 6-ம் நூற்றாண்டில் பாண்டியர்களால் கட்டப்பட்ட இந்தக் கோயில், தமிழ்நாட்டின் மிக முக்கிய ஆன்மீக மற்றும் கட்டிடக்கலை பொக்கிஷங்களில் ஒன்றாகும். கும்பாபிஷேகம் செய்வதன் மூலம், கோயிலின் தெய்வங்களையும் கோபுரங்களையும் புனிதப்படுத்தி கோயிலுக்கு புதிய ஆன்மீக ஆற்றலை வழங்குகிறது. இந்த ஆன்மீக விழாவில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானை, கற்பக விநாயகர், துர்கை அம்மன், சத்ய கிரீஸ்வரர், மகாலட்சுமி, பவள கனிவை பெருமாள் மற்றும் கோவர்த்தனாம்பிகை ஆகியவற்றில் கலசங்கள் மாற்றப்படும். இந்த கோயிலில் தான் முருகன் திருமண கோலத்தில் காட்சியளிக்கிறார்.
இதையும் படிங்க: பக்தர்களே நோட் பண்ணிக்கோங்க.. ஒரு மாதத்திற்கு பழனி முருகன் கோவிலில் இது கிடையாதாம்..!