திமுகவின் தலைமை கழக பேச்சாளர்களில் ஒருவரான சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெயர் கேட்டாலே பலருக்கு முதலில் நினைவுக்கு வருவது அவரது ஆபாசமான, அவதூறு நிறைந்த பேச்சுகள்தான். அரசியல் மேடைகளில் எதிர்க்கட்சியினரை விமர்சிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆனால் அவர் பேசும் விதம் பெரும்பாலும் கொச்சையாகவும், பெண்களை இழிவுபடுத்தும் வகையிலும், தரம் தாழ்ந்த வார்த்தைகளுடனும் இருப்பது தொடர்ந்து விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது.கடந்த சில ஆண்டுகளாகவே இது தொடர்கதையாக இருக்கிறது. 2023-ல் ஆளுநர் ஆர்.என்.ரவி, பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நடிகை குஷ்பு சுந்தர் உள்ளிட்டோரை இழிவாகப் பேசியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
குஷ்பு கண்ணீர் விட்டு அழுத சம்பவம் கூட அப்போது பேசப்பட்டது. அவரது பேச்சு ஆபாசமாக இருந்ததால் திமுக அவரை தற்காலிகமாக நீக்கியது. ஆனால் சில மாதங்களிலேயே மன்னிப்பு கேட்டுக்கொண்டு மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டார்.

இருப்பினும் தனது ஆபாச பேச்சுக்களை அவர் நிறுத்தவில்லை. இந்த நிலையில், கொடுங்கையூர் கூட்டத்தில் ஆளுநர், நடிகை குஷ்பு உள்ளிட்டோரை ஆபாசமாக பேசியதாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது தொடரப்பட்ட வழக்கில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீரான மற்ற குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு தகுந்த சாட்சிகளுடன் நிரூபித்துள்ளது.
இதையும் படிங்க: திடீர் திருப்பம்... “ரூ. 5000 மகளிர் உதவித் தொகையை வரவேற்கிறோம்...” - தவெக அருண் ராஜ் கொடுத்த அல்டிமேட் விளக்கம்...!
தற்போது திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு மூன்று ஆண்டு மூன்று மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் 20,000 ரூபாய் அபராதம் பிடித்து எழும்பூர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. தண்டனை தொடர்பாக சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மேல்முறையீடு செய்ய ஒரு மாத காலம் எழும்பூர் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: நம்பியாருக்கும் - எம்.ஜி.ஆருக்கு தான் பைட்... அப்போ விஜய் யாரு?... சட்டென செல்லூர் ராஜு கொடுத்த ரியாக்ஷன்...!