சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரத்தில் போலீசார் விசாரணையின் போது அஜித்குமார் (30) உயிரிழந்தார். கோயில் பின்புறம் கோசாலையில் வைத்து போலீசார் அடிக்கும் போது கோயில் ஊழியர் சத்தீஸ்வரன் செல்போனில் படம் எடுத்தார். அஜித் குமார் வழக்கின் முக்கிய சாட்சி சத்தீஷ்வரன் தான். ஐகோர்ட்டிலும் சத்தீஷ்வரன் சாட்சி சொன்னதால் பாதுகாப்பு கேட்டு டிஜிபிக்கு ஆன்லைன் மூலம் மனு அனுப்பி உள்ளார்.

இன்று சத்தீஷ்வரன் வழக்கறிஞர் கணேஷ் குமாருடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “உண்மை தகவலை காவல்துறையினரிடம் சொன்னதற்கு போலீசார் என்னையே தவறாக சொன்னார்கள் , போலீசார் அடிக்கும் போது வேடிக்கை பார்த்து படம் பிடித்ததாக மனிதாபிமானமே இல்லாமல் என்னையே குற்றம் சாட்டுகின்றனர் .

கடைசிவரை என்னை மாமா என அஜீத்குமார் அழைத்தார். நான் தைரியமாக வெளிவந்த சாட்சியம் அளித்த உடன் தான் மற்ற சாட்சிகளும் வெளியே வந்தனர். எனக்கு பாதுகாப்பு வேண்டும், காவல் துறைக்கு எதிராக இருப்பததால் எல்லோரும் உண்மையை சொல்ல பயப்படுகிறார்கள். எனக்கு மறைமுகமாக மிரட்டல் விடுக்கப்படுகிறது. உயிரிழந்த அஜித்தின் குடும்பத்திற்கும் பாதுகாப்பு வேண்டும். நீதி கேட்டு வரும் கோவிலிலேயே இது போன்ற சம்பவம் மனதிற்கு வேதனையளிப்பதாகவும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இனி இதுபோல நடக்காதுன்னு உத்தரவாதம் கொடுங்க முதல்வரே.. கொந்தளித்த தவெக விஜய்..!
எங்களுக்கென்று தனி பாதுகாப்பு கொடுக்க வேண்டும், அது சிவகங்கை மாவட்ட காவல்துறையாக இருக்கக் கூடாது, வெளி மாவட்ட காவல் துறையினர் மடப்புரம் முழுவதும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த வேண்டும், எங்களுக்கு பாதுகாப்பு வழங்கி நீதி கிடைக்கவில்லை என்றால் நாங்கள் இதனை நீதிமன்றத்திற்கு மேல் முறையீட்டிருக்கு கொண்டு செல்வோம் என்றார்.
இதையும் படிங்க: தமிழகத்தையே உலுக்கிய லாக்அப் மரணம்... 5 காவலர்களுக்கு சிறை...!