திருவள்ளூரில் அரசு பள்ளியின் சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் மாணவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது சுவர் இடிந்து மேலே விழுந்ததில் மாணவன் உயிரிழந்தார். மாணவனின் பெற்றோர் கதறி துடித்து அழும் சம்பவம் காண்போரை கலங்கச் செய்தது. மாணவனின் உடலை வாங்க மாட்டோம் என பெற்றோர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் கொண்டாரபுரம் பகுதியில் அரசு உயர்நிலை பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான மாணவர்கள் பயின்று வரும் நிலையில், ஒரு சோகச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பள்ளியின் பக்கமாட்டுச் சுவர் இடிந்து விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் அதே பள்ளியில் ஏழாம் வகுப்பு பயின்று வரும் மோகித் என்ற மாணவன் உயிரிழந்து உள்ளார்.

மதிய உணவு இடைவேளைக்காக நடைமேடைமீது அமர்ந்து மோகித் உணவு அருந்திக்கொண்டு இருந்துள்ளார் அப்போது எதிர்பாராத விதமாக பள்ளியின் பக்கவாட்டு சுவர் சரிந்து விழுந்தது. மோகித்தின் மேலே சுவர் இடிந்து விழுந்த சம்பவத்தில் உடல் நசுங்கி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். சுவர் இடிந்து விழுந்ததில் உடல் நசுங்கிய நிலையில் துடிதுடித்து மோகித்தின் உயிர் போய் உள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரது பெற்றோருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தங்கள் மகன் உயிரிழந்ததை அறிந்ததும் பதறிப் போய் ஓடி வந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளி வளாகத்திலேயே கதறி அழுதனர். இந்த சம்பவம் காண்போரை கலங்கச் செய்தது. இந்த அசம்பாவிதம் தொடர்பாக தொடர்ந்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: #BREAKING: அரசு பள்ளி சுவர் இடிந்து மாணவன் பலி… உடல் நசுங்கி துடிதுடித்து பறிபோன உயிர்..!
இதனிடையே மாணவனின் சடலத்தை வாங்க பெற்றோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். மாணவனின் குடும்பத்திற்கு ஒரு கோடி ரூபாய் மற்றும் அரசு வேலை வழங்கினால் மட்டுமே சடலத்தை வாங்குவோம் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். மாணவனின் பெற்றோரிடம் எம்எல்ஏ எஸ்.சந்திரன் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. பதற்றம் நீடிப்பதால் முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வெட்கக்கேடு, அவமானம்... விளம்பரம் தேவையா முதல்வரே? பள்ளி மாணவன் உயிரிழப்புக்கு நீதி கேட்ட சீமான்...!