தூத்துக்குடி அண்ணா நகர் 12 மங்களபுரம் பகுதியில் பலசரக்கு இரும்பு கடையில் தனியாக இருந்த அமுதா என்ற பெண்ணை இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் கும்பல் கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி ஓடிய சம்பவத்தால் பரபரப்பு உயிருக்கு ஆபத்தான நிலையில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அமுதா பரிதாபமாக சிகிச்சை பலனின்றி பலி இரண்டு பேரை கைது செய்து காவல்துறை விசாரணை
தூத்துக்குடி அண்ணா நகர் 12வது தெரு மங்களபுரம் பகுதியை சேர்ந்தவர் பூபால் ராஜா ஆட்டோ ஓட்டுகிறார் இவரது மனைவி அமுதா இவர்கள் வீட்டில் முன்புறம் பழைய இரும்பு மற்றும் பலசரக்கு கடை வைத்து தொழில் செய்து வருகின்றனர்.
இந்த தம்பதிக்கு இரண்டு பெண், ஒரு ஆண் பிள்ளைகள் மூன்று பேருக்கும் திருமணம் ஆகி விட்டது இதில் மகன் அருண்குமார் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு செல்வி என்ற பெண்ணை காதல் திருமணம் செய்து தனது மனைவி குழந்தைகளுடன் தனியாக அந்தப் பகுதி அருகே வசித்து வருகிறார் அருண்குமார் அடிக்கடி குடித்துவிட்டு தனது தாய் தந்தை மற்றும் குடும்பத்துடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது
இதையும் படிங்க: வெட்டி சரிக்கப்பட்ட கானா பாடகர்கள் - தமிழகத்தையே உலுக்கிய சம்பவத்தில் 2 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது...!
இந்நிலையில் நேற்று முன் தினம் இரவு அருண்குமாருக்கும் அவரது மனைவிக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்சனையில் மகனுக்கு ஆதரவாக அமுதா பேசியதாக தெரிகிறது. இதனிடையே, நேற்று பிற்பகல் அமுதா தனது வீட்டு முன்பு உள்ள தனது கடையில் இருக்கும் போது அந்தப் தெருவில் ஆள் நடமாட்டம் இல்லாததை தெரிந்து கொண்டு ராயல் என்பில்டு வாகனத்தில் வந்த இரண்டு பேர் இருசக்கர வாகனத்தில் தாங்கள் மறைத்து வைத்து எடுத்து வந்த அறிவாளால் அமுதாவை கொடூரமாக வெட்டிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்
இதைத் தொடர்ந்து கடைக்கு சாமான்கள் வாங்க வந்த அந்த பகுதியைச் சேர்ந்த சிலர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு அமுதா போராடிக் கொண்டிருப்பதை பார்த்து அலறியபடி அக்கம் பக்கத்தினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதிக்கு சிப்காட் காவல் துறையினர் மற்றும் ரூரல் டிஎஸ்பி சுதிர் ஆகியோர் வருகை தந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அமுதாவை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக சிப்காட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட தகராறில் அருண்குமாரின் மனைவியின் சகோதரர் சங்கர் உள்ளிட்ட இரண்டு பேர் இந்த கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை வழக்கு தொடர்பாக இரண்டு பேரை காவல்துறையினர் பிடித்து விசாரணை செய்து வருவதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க: கோவையை உலுக்கிய பயங்கரம்... 13 வயது சிறுவனை கொன்று புதைத்த சக வயது நண்பர்கள்... நடந்தது என்ன?