திருப்பூர் ஆண்டிபாளையம் பிரிவு பகுதியில் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த ராயபுரத்தை சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளரை சோதனை செய்ததில் பையில் கட்டு கட்டாக 30 லட்சம் பணம் இருந்தது தெரியவந்தது.
திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிப்பாளையம் பிரிவு பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனை செய்ததில் இருக்கைக்கு அடியில் கட்டு கட்டாக 30 லட்சம் ரூபாய் பணம் இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக ஆவணங்கள் கேட்டபோது அவரிடம் எந்த ஆவணமும் இல்லை என தெரியவந்தது மேலும் விசாரணையில் இவர் ராயபுரத்தைச் சேர்ந்த பனியன் நிறுவன உரிமையாளர் இமான் 37 என்பதும் நிலம் வாங்குவதற்காக 30 லட்சம் ரூபாய் பணத்தை வைத்திருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒப்பாரி வச்சி கதறியும் கண்டுக்கல... தேர்தல் புறக்கணிப்பு... 150 குடும்பங்கள் எடுத்த முடிவால் திடீர் பரபரப்பு...!
இதனைத் தொடர்ந்து ஆவணங்கள் இல்லாத பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் திருப்பூர் மாநகராட்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர். மேலும் வணிகவரித்துறை அதிகாரிகளுக்கும் பணம் பிடிப்பட்டது தொடர்பாக தகவல் தெரிவித்துள்ளனர் அவர்களது விசாரணைக்கு பின்னர் உரிய ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டால் பணம் திரும்ப வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர் .
இதையும் படிங்க: தேர்தல் வேட்டையில் சிக்கிய பிரபல நகைக்கடை... ரூ.65 கோடி மதிப்புள்ள 46 கிலோ நகைகள் பறிமுதல்... !!