சென்னை சேத்துப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் குமார் (58). இவர் ஆன்லைன் மூலம் வங்கிகளில் லோன் பெற்று தரும் பணியை மேற்கொண்டு வருகிறார். திருப்பூரைச் சேர்ந்த தங்கப்பாண்டி என்பவரிடம் கடன் பெற்று தருவதாக கூறி 3 லட்சம் பணம் பெற்றுள்ளார்m இதேபோல் அன்பு என்பவரிடமிருந்து கடந்த 2019 ஆம் ஆண்டு 3 லட்ச ரூபாய் பணம் பெற்றுள்ளார். ஆனால் இருவருக்கும் இதுவரை எந்தவிதமான கடனும் பெற்றுத் தரவில்லை.
கடன் தாமதமாகவே தங்கள் கொடுத்த பணத்தை அன்பு மற்றும் தங்கபாண்டி ஆகியோர் திருப்பி கேட்டுள்ளனர். இந்நிலையில் , ரமேஷ் குமார் அவிநாசி அருகே உள்ள ஹோட்டலில் தங்கிருப்பதாக தங்கப்பாண்டிக்கு (35) தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் தங்கப்பாண்டி தனது நண்பர்களான அன்பு (39) , இசக்கி ராஜா (24) , ரஞ்சித் குமார் (28) முத்துக்குமார் (34) ஆகியோருடன் ரமேஷ் குமாரை சந்திக்க சென்றுள்ளார்.
அப்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் 5 பேரும் சேர்ந்து ரமேஷ் குமாரை தாக்கி காரில் திருப்பூர் அழைத்து வந்துள்ளனர். திருப்பூரில் செந்தாம்பாளையம் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான கார் பார்க்கிங் பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக அடைத்து வைத்து பணத்தைக் கேட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அசாமில் பரபரப்பு! மாயமான இந்திய விமானப்படையின் 'சுகோய்-30' போர் விமானம்!
இந்த தகவல் ரமேஷ் குமாரின் நண்பர்களுக்கு தெரிய வரவே , அவர் காவல் கட்டுப்பட்டு அறைக்கு தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் நல்லூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு செந்தாம்பாளையம் பகுதியில் இருந்த ரமேஷ் குமாரை மீட்டு அவரை கடத்திச் சென்ற தங்கப்பாண்டி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: வான்கடே மைதானத்தில் தோனி - ரோஹித் சந்திப்பு! டி-20 உலகக்கோப்பை அரையிறுதியில் நெகிழ்ச்சி!