மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் திருவண்ணாமலை வருகையை முன்னிட்டு அண்ணாமலையார் கோயிலில் கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கோயிலுக்குள் கேமரா பொருத்தப்பட்ட கண் கண்ணாடி மூலம் சன்னதிகளை புகைப்படம் எடுக்க முயன்ற இருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார்.
ரமண மகரிஷி ஆசிரமத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிறகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் திட்டத்துடன் அவரது பயணம் அமைந்துள்ளது. இதையொட்டி கோயில் வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் மூன்று அடுக்கு பாதுகாப்பு வளையம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய ரிசர்வ் போலீஸ் உள்ளிட்ட பாதுகாப்புப் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், கோயில் மற்றும் அதன் அருகாமைப் பகுதிகளில் ட்ரோன்கள் பறக்க முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.இத்தகைய கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் இருக்கும் வேளையில், ஹைதராபாத்தைச் சேர்ந்த இருவர் கோயிலுக்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் கேமரா பொருத்தப்பட்ட ஸ்மார்ட் கண் கண்ணாடி அணிந்து அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்மன் சன்னதிகளை ரகசியமாக புகைப்படம் எடுக்க முயன்றனர். கோயில் விதிகளின்படி சன்னதிகளுக்குள் புகைப்படம் எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: இந்தியாவுக்கு 100% வரி?! டிரம்பு கையில் அதிகாரம்? அமெரிக்க செனட்டில் அதிரடி மசோதா! புதிய நெருக்கடி
குறிப்பாக மறைக்கப்பட்ட கேமராக்கள் அல்லது ஸ்மார்ட் கண்ணாடிகள் போன்ற சாதனங்கள் மூலம் பதிவு செய்வது கடுமையான விதிமீறலாகக் கருதப்படுகிறது.பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் கோயில் பணியாளர்களின் விழிப்புணர்வால் இவர்களின் முயற்சி தடுக்கப்பட்டது. கேமரா பொருத்தப்பட்ட கண் கண்ணாடி மற்றும் அவர்கள் வைத்திருந்த செல்போன்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்பட்டன. இருவரையும் காவல்துறையினர் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர். இவர்களின் நோக்கம் குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: கோயில்களில் VIP கலாசாரத்திற்கு செக்? அமைச்சர், எம்எல்ஏக்களுக்கும் கட்டுப்பாடு! போட்டோ, வீடியோ எடுக்க தடை!