சென்னை அடையாறில் அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாகப் பணிபுரிந்து வந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த 24 வயது இளைஞர் தம்பி கௌரவ் குமார், அவருடைய மனைவி மற்றும் குழந்தையுடன் படுகொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை வட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் எழுப்பி செய்யப்பட்டிருப்பதாக கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாறி வருகிறது என்ற கடுமையான குற்றச்சாட்டுக்கு தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் கண்டனம் தெரிவித்துள்ளது. அடையாறில் பீகாரைச் சேர்ந்த குடும்பம் கொலை செய்யப்பட்டு இருப்பதாகவும் இந்த சம்பவம் தொடர்பாக பீகாரைச் சேர்ந்தவர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் வெறுப்பை பரப்பாதீர்கள் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சென்னையில் பீகாரைச் சேர்ந்த கௌரவ்குமார் மற்றும் அவரது மனைவி குழந்தை கொலை செய்யப்பட்டுள்ளனர் என்றும் தமிழ்நாடு வடமாநில தொழிலாளர்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறி வருகிறது என்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது எனவும் தவறான தகவல்கள் பரப்பப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. உண்மை என்னவென்றால், பீகார் மாநிலத்தில் இருந்து வேலைக்காக சென்னை வந்த கௌரவ்குமார் மற்றும் அவரது குடும்பத்தை கொலை செய்த சம்பவத்தில் பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சிகந்தர், நரேந்திர குமார், ரவீந்திரநாத் தாகூர், விகாஸ் உள்ளிட்ட 5 பேர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: வரமாட்டோம்..! ஆளுநர் விருந்தை புறக்கணிக்கும் தமிழக அரசு...! அமைச்சர்களும் பங்கேற்க மாட்டார்கள் என அறிவிப்பு..!
ஆனால், தமிழ்நாட்டில் வடமாநிலத்தவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும், வடமாநிலத்தவர்கள் மீதுள்ள வெறுப்பால் கொலை நடந்ததாக ஆதாரமற்ற வதந்தியைப் பரப்பி வருவதாகவும் இருமாநிலங்களுக்கு இடையே பிரிவினையை உண்டாக்கும்படி செய்திகளைப் பகிர்வது குற்றம் என்றும் வெறுப்பை பரப்ப வேண்டாம் எனவும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை நிறைவு..! கடைசி நாளில் தலை காட்டாத அதிமுக உறுப்பினர்கள்..!