தமிழகச் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு கரூரில் நடைபெற்ற பிரம்மாண்டப் பொதுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி மற்றும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடுமையாக விமர்சித்துப் பேசினார்.
கலைஞர் அவர்கள் பாஜக-வுடன் கூட்டணி வைத்தாரே தவிர, பழனிசாமியைப் போல் கட்சியையும் கொள்கையையும் யாரிடமும் அடகு வைக்கவில்லை. அன்று பாஜக-வின் கடிவாளம் கலைஞரின் கையில் இருந்தது. ஆனால் இன்று, என்.டி.ஏ கூட்டணியில் இணைந்துள்ள அனைவரின் குடுமியும் அமித் ஷாவின் கையில்தான் உள்ளது. தான் ஒரு மங்குனி என்பதை எடப்பாடி பழனிசாமி மணிக்கு ஒருமுறை நிரூபித்து வருகிறார் என ஆவேசமாகத் தெரிவித்தார்.
ஓ.பி.எஸ் முதல் சசிகலா வரை அனைவருக்கும் துரோகம் செய்தவர் பழனிசாமி என்று குறிப்பிட்ட முதல்வர், அதிமுக-வை வாடகைக்கு விட்டுவிட்டு அவர் இன்று பேசிக்கொண்டிருக்கிறார். அதிமுக-விலிருந்து விலகித் திமுக-விற்கு வருபவர்களைப் பார்த்து ஆத்திரத்தில் எபாண்டமாகப் பேசுகிறார். துரோகத்திற்குத் துரோகமே துணை என்பது போல்தான் இந்த என்.டி.ஏ கூட்டணி அமைந்திருக்கிறது என்றார்.
இதையும் படிங்க: கரூர் எப்போதுமே கழக ஊர் தான்! செந்தில் பாலாஜியை புகழ்ந்து தள்ளிய முதலமைச்சர் ஸ்டாலின்!

திட்டங்கள் முடக்கம்: பாஜக அரசு ஒன்றியத்தில் அமைந்த பின் தமிழகத்திற்கு எந்தத் திட்டங்களையும் நிறைவேற்றவில்லை. இந்தியைத் தமிழகத்தில் கட்டாயப்படுத்துகிறார்கள். நாம் அதனை ஏற்காததால், பள்ளி மாணவர்களுக்கு வழங்க வேண்டிய கல்வி நிதியைக்கூட இதுவரை வழங்காமல் வஞ்சிக்கிறார்கள். குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்தவர் எடப்பாடி பழனிசாமி என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள்.
திராவிட மாடல் ஆட்சியில் இதுவரை செய்துள்ள திட்டங்கள் வெறும் டிரைலர் தான். அடுத்த ஆட்சியில் இன்னும் ஹிட்டான திட்டங்களை நிறைவேற்றுவோம். நாம் போராடுவது திமுக-வின் வெற்றிக்காக மட்டுமல்ல, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக. வஞ்சகத்தின் முழு உருவமான என்.டி.ஏ கூட்டணியைத் தமிழக மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறைகூவல் விடுத்தார்.
இதையும் படிங்க: பாஜகவின் அடிமை அதிமுக! திருவாரூர் தேர்தல் பரப்புரையில் முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி பேச்சு!