• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Monday, August 17, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 இந்தியா

    ஹோட்டலில் அதிகாலை பயங்கர தீ விபத்து: 7 பேர் உடல் கருகி பலி! தப்பிக்க முடியாமல் சிக்கிய மக்கள்!

    மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள தாராபீத் என்ற இடத்தில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தீ பற்றியதில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.
    Author By Pandian Mon, 17 Aug 2026 11:08:20 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    Tarapith-Hotel-Fire-Birbhum-West-Bengal-7-Pilgrims-Killed

    மேற்கு வங்கத்தின் பீர்பூம் மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற தாராபீத் பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்தவர்கள் அனைவரும் தாராபீத் கோவிலுக்கு வந்த யாத்ரீகர்கள் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

    தாராபீத் பகுதியில் செயல்பட்டு வரும் நான்கு மாடி தனியார் ஹோட்டலில் இன்று (ஆகஸ்ட் 17) அதிகாலை சுமார் 4 மணியளவில் திடீரென தீப்பற்றியது. அதிகாலை நேரம் என்பதால் பெரும்பாலான விருந்தினர்கள் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தீ விபத்து ஏற்பட்டதை அறிந்து பலர் உடனடியாக வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டனர்.

    தீ பற்றிய சிறிது நேரத்திலேயே ஹோட்டல் கட்டிடம் முழுவதும் புகை சூழ்ந்ததாகவும், பின்னர் தீ வேகமாக பரவியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து தகவல் கிடைத்ததும் போலீசார் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

    இதையும் படிங்க: திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் கட்சி அலுவலகத்தில் சடலமாக மீட்பு! தற்கொலையா? கொலையா? போலீஸ் விசாரணை!

    இரண்டு தீயணைப்பு வாகனங்களுடன் வந்த வீரர்கள் நீண்ட நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து கட்டிடத்துக்குள் சென்று மீட்புப் பணிகளிலும் ஈடுபட்டனர். இந்த தீ விபத்தில் 7 பேர் உடல் கருகி உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், சிலர் புகை காரணமாக மூச்சுத்திணறலுக்கு ஆளாகியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

    Birbhum

    தீ விபத்து ஏற்பட்டபோது ஹோட்டலில் தங்கியிருந்த கொல்கத்தாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சம்பவத்தின் பயங்கரத்தை விவரித்துள்ளார். ஹோட்டல் முழுவதும் திடீரென புகை பரவியதால் மூச்சுவிடுவதற்கே சிரமமாக இருந்ததாகவும், வெளியேறுவதற்கான வழியை கண்டுபிடிப்பது மிகவும் கடினமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். புகை அதிகமாக இருந்ததால் பலரால் தப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் கூறினார்.

    தீ விபத்துக்கான காரணம் இதுவரை அதிகாரப்பூர்வமாக தெரியவில்லை. மின்கசிவு உள்ளிட்ட காரணங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. தீ முற்றிலும் அணைக்கப்பட்ட பின்னர் கட்டிடத்தில் விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது.

    சம்பவ இடத்தில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள நிலையில், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அதிகாலை நேரத்தில் யாத்ரீகர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் ஏற்பட்ட இந்த தீ விபத்து, தாராபீத் பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: நீட் போராட்டத்தில் போலீஸ் சீருடையில் ஊடுருவ சதி? டெல்லி போராட்டத்தை குறிவைத்த பயங்கரவாதி? அதிர்ச்சி தகவல்!

    மேலும் படிங்க
    CM விஜய் ஆட்சி எப்படி இருக்கு.. மக்களுக்கு சாதகமா.. பாதகமா..? நடிகை ஸ்ரேயா சொன்ன ஒற்றை வார்த்தை.. ஷாக்கில் இளசுகள்..!

    CM விஜய் ஆட்சி எப்படி இருக்கு.. மக்களுக்கு சாதகமா.. பாதகமா..? நடிகை ஸ்ரேயா சொன்ன ஒற்றை வார்த்தை.. ஷாக்கில் இளசுகள்..!

    சினிமா
    போலீஸ் தாக்கியதில் மரணம்?! “என் சாவுக்கு அந்த 5 பேர்தான் காரணம்”! இறப்புக்கு முன் வீடியோ வெளியிட்ட சிவனடியார்!

    போலீஸ் தாக்கியதில் மரணம்?! “என் சாவுக்கு அந்த 5 பேர்தான் காரணம்”! இறப்புக்கு முன் வீடியோ வெளியிட்ட சிவனடியார்!

    குற்றம்
    குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா... இந்தியா முழுவதும் ரயில்வே பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா... இந்தியா முழுவதும் ரயில்வே பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    இந்தியா
    மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை! ராஜ்யசபா செயலகம் அறிவிப்பு

    மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை! ராஜ்யசபா செயலகம் அறிவிப்பு

    அரசியல்
    சேலையில் வந்த ஸ்ரீலீலா.. மேலே இருந்து கொட்டிய பூக்கள்..!! மால் திறப்பு விழாவில் ரசிகர்களை வியக்க வைத்த நடிகை..!

    சேலையில் வந்த ஸ்ரீலீலா.. மேலே இருந்து கொட்டிய பூக்கள்..!! மால் திறப்பு விழாவில் ரசிகர்களை வியக்க வைத்த நடிகை..!

    சினிமா
    இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக.. இலங்கையில் இசை வெளியீட்டு விழா..!! தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த புதிய அங்கிகாரம்..!

    இந்திய சினிமா வரலாற்றில் முதன்முறையாக.. இலங்கையில் இசை வெளியீட்டு விழா..!! தமிழ் திரைப்படத்திற்கு கிடைத்த புதிய அங்கிகாரம்..!

    சினிமா

    செய்திகள்

    போலீஸ் தாக்கியதில் மரணம்?! “என் சாவுக்கு அந்த 5 பேர்தான் காரணம்”! இறப்புக்கு முன் வீடியோ வெளியிட்ட சிவனடியார்!

    போலீஸ் தாக்கியதில் மரணம்?! “என் சாவுக்கு அந்த 5 பேர்தான் காரணம்”! இறப்புக்கு முன் வீடியோ வெளியிட்ட சிவனடியார்!

    குற்றம்
    குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா... இந்தியா முழுவதும் ரயில்வே பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    குடிநீரில் ஈ-கோலை பாக்டீரியா... இந்தியா முழுவதும் ரயில்வே பிறப்பித்த அதிரடி உத்தரவு...!

    இந்தியா
    மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை! ராஜ்யசபா செயலகம் அறிவிப்பு

    மதுரை எய்ம்ஸ் நிர்வாகக் குழுவில் அ.தி.மு.க. எம்.பி. இன்பதுரை! ராஜ்யசபா செயலகம் அறிவிப்பு

    அரசியல்
    போதைப் பொருளால் தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தார்கள்... அமைச்சர் பேச்சால் கொந்தளிப்பு... பேரவையில் அமளி.. !!

    போதைப் பொருளால் தான் திமுகவை மக்கள் தூக்கி எறிந்தார்கள்... அமைச்சர் பேச்சால் கொந்தளிப்பு... பேரவையில் அமளி.. !!

    தமிழ்நாடு
    UGC NET மறுதேர்வு அறிவிப்பு: 3 பாடங்களுக்கு மீண்டும் தேர்வு – வினாத்தாளில் இத்தனை குளறுபடிகளா?

    UGC NET மறுதேர்வு அறிவிப்பு: 3 பாடங்களுக்கு மீண்டும் தேர்வு – வினாத்தாளில் இத்தனை குளறுபடிகளா?

    இந்தியா
    பீகார் அசோக்தாம் கோவிலில் பயங்கர கூட்ட நெரிசல்: 7 பக்தர்கள் பலி; மின்கம்பம் விழுந்ததால் ஏற்பட்ட பீதியில் சோகம்!

    பீகார் அசோக்தாம் கோவிலில் பயங்கர கூட்ட நெரிசல்: 7 பக்தர்கள் பலி; மின்கம்பம் விழுந்ததால் ஏற்பட்ட பீதியில் சோகம்!

    இந்தியா

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share