தமிழ்நாட்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பெரிய நகரங்களான கோவை மற்றும் மதுரை, வேகமாக வளரும் தொழில் மற்றும் சுற்றுலா மையங்களாக உருமாற்றம் காண்கின்றன. கோவையில் தினசரி லட்சக்கணக்கான பணியாளர்கள் அவிநாசி சாலை மற்றும் சத்தியமங்கலம் சாலை போன்ற பரபரப்பான பாதைகளில் போக்குவரத்து நெரிசலில் சிக்குகின்றனர். அதேபோல், மதுரையில் திருமங்கலம் முதல் ஓதக்கடை வரையிலான பகுதிகள், மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுப்பகுதி மற்றும் பெரியார் பஸ் டெர்மினஸ் போன்றவை போக்குவரத்து அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளன.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, 2010-ஆம் ஆண்டு மத்திய அரசு 16 இரண்டாம் நிலை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டங்களை அறிவித்தபோது, கோவை மற்றும் மதுரை இதில் சேர்க்கப்பட்டன. 2011-இல் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் கீழ் இந்தத் திட்டங்கள் முறையாக அறிவிக்கப்பட்டன. தற்போது, கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்தது.

இபிஎஸ் ஆட்சி அமைந்தால் கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ வரும் என எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் டிடிவி தினகரன் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தங்கள் ஆட்சி அமைந்தால் கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும் என பேசுவது கண்டனத்திற்குரியது என அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: NDA கூட்டணிக்குள் மீண்டும் டிடிவி தினகரன், ஓபிஎஸ்... நயினார் நாகேந்திரன் சொன்ன 'நறுக்' அப்டேட்...!
இபிஎஸ் ஆட்சியில் மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டம் வரும் என பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்று தெரிவித்தார். பாஜக கூட்டணி ஆட்சியில் மதுரை மற்றும் கோவைக்கு மெட்ரோ வரும் என்பது தமிழகத்தை காழ்ப்புணர்ச்சியுடன் அணுகும் செயல் என்றும் கூறினார். மக்கள் தொகையை கருத்தில் கொண்டு கோவை மற்றும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும் என்றும் டிடிவி தினகரன் வலியுறுத்தினார். மெட்ரோ ரயில் திட்டம் என்பது மக்களின் கோரிக்கை என்றும் அது திமுகவின் கோரிக்கை அல்ல எனவும் டிடிவி தினகரன் கூறினார்.
இதையும் படிங்க: பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!