ஏப்ரல் 23ஆம் தேதி தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடக்கிறது. பல்வேறு அரசியல் கட்சியினரும் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருகின்றனர். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலில் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளது. கூட்டணி பேச்சுவார்த்தைகளில் எந்தவித சமரசமும் இல்லாமல், தனது கொள்கை அடிப்படையில் மட்டுமே முன்னேறும் என்று விஜய் தெளிவாக அறிவித்திருந்தார்.
இந்தச் சூழலில், திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் தவெக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் எம். சத்தியகுமார், தேர்தல் பிரச்சாரத்தில் தன்னந்தனியாக ஈடுபட்டு வருவது கவனத்தை ஈர்த்துள்ளது. தவெகவின் வேட்பாளர் பட்டியல் மார்ச் 29, அன்று விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்டபோது, திருத்தணி தொகுதிக்கு சத்தியகுமார் பெயர் இடம்பெற்றது.

இவர் ஒரு வழக்கறிஞர் என்பதால், கட்சியின் அறிமுகக் கூட்டங்கள் மற்றும் பிரச்சார நிகழ்வுகளில் அவரது பங்கு முக்கியமானதாகக் கருதப்பட்டது. ஆனால், தொகுதி அளவில் சில உள்ளூர் நிர்வாகிகள் மற்றும் சொந்தக் கட்சித் தோழர்களிடையே ஏற்பட்ட முரண்பாடுகள் காரணமாக, பிரச்சாரப் பணிகளில் அவர்களின் ஆதரவு குறைந்துவிட்டதாகத் தெரிகிறது.
இதையும் படிங்க: "தீயசக்தி திமுக"... சிறுவர்களை வைத்து பிரச்சாரம்... தவெக நிர்வாகி மீது FIR..!!
சொந்த கட்சி காரர்களே கைவிட்ட நிலையில் வேட்பாளர் சத்தியகுமார் தனது தொகுதியில் தனியாகவே பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார். தவெகவின் கொள்கைகளை மக்களிடம் எடுத்துரைத்து, விஜய்யின் தலைமையில் தமிழகத்தை மாற்றியமைக்கும் வாக்குறுதிகளைப் பகிர்ந்து வருகிறார். சொந்தக் கட்சியினரே கைவிட்ட நிலையில் வேட்பாளர் சத்திய குமாருக்கு இப்படி ஒரு சத்திய சோதனையா என்று கேள்வி எழுப்பி வருகின்றது.
இதையும் படிங்க: காங்கிரஸில் இருந்து விலகி ஆட்டோ ஓட்டுநர்கள்..! தவெகவில் ஐக்கியம்..!!