தமிழகத்தில் வரும் 23ஆம் தேதி சட்டமன்றத் தொகுதி பெறுகிறது. இதன் காரணமாக அனைத்து அரசியல் கட்சிகளும் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களை மேற்கொண்டு உள்ளனர்.
வில்லிவாக்கம் சட்டமன்றத் தொகுதியில் உள்ள ICF காலனி, முளகாளியம்மன் கோயில், பாளயகாரத் தெரு ஆகிய பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் நடத்தியதாக தவெக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார். ஓட்டுக்கு எட்டாயிரம், பத்தாயிரம் என்று பணம் கொடுத்து மக்களின் மதிப்பையும், மக்களாட்சி மாண்பையும் கேலிக்கூத்தாக்கி வருகிறார்கள் அதிகார கட்சியினர். 'மக்களை விலைக்கு வாங்கி ஜெயித்துவிடலாம்' என்ற அவர்கள் பகல் கனவு இனி ஒருபோதும் பலிக்காது என்று கூறினார்.

பணத்தைத் தாண்டி மக்களின் மனதை, பேரத்தைக் கடந்து மக்களின் எண்ணத்தை, அரசியல் கணக்குகளை மீறி மக்கள் மீதான அக்கறையைக் கொண்டுள்ள நம்மை மக்கள் தங்கள் பிரதிநிதியாக தேர்ந்தெடுக்க முடிவெடுத்துவிட்டார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விஜய் பரப்புரையின்போது விபத்து..! தவெக நிர்வாகிகள் மீது பாய்ந்த வழக்குகள்..!!
வில்லிவாக்கம் தொகுதி தாய்மார்களும், அக்கா, தங்கைகளும் என்னை அவர்கள் வீட்டில் ஒருவனாக அரவணைக்கும் பாசமான உறவு, பல ஆயிரம் ரூபாய் கொடுத்தாலும் வராது என்றும் கூறியுள்ளார். வாக்கைத் தேர்தல் நேரத்து வியாபாரமாகப் பார்க்கும் வாரிசு பண்ணையார்களுக்கு எதிராக, வாக்காளர்கள் அனைவரையும் தனது குடும்பமாகப் பார்த்துவரும் வெற்றித் தலைவர் விஜயை தமிழக முதல்வராகத் தேர்ந்தெடுக்க மக்கள் தயாராகிவிட்டார்கள் என்றும் தெரிவித்துள்ளார். விசில் சின்னத்திற்கு வாக்களித்து வில்லிவாக்கம் தொகுதிக்கான நலனை வென்றெடுப்போம் என்று உறுதிப்பட கூறினார்.
இதையும் படிங்க: புதுச்சேரி மக்களே..! விழிப்புடன் வாக்களியுங்கள்..! தவெக தலைவர் விஜய் வேண்டுகோள்..!!