தமிழக வெற்றி கழகத்தின் செயல்வீரர்கள் கூட்டம் ஒரு முக்கியமான அரசியல் நிகழ்வாக நடைபெற்று வருகிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார். விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் தமிழக வெற்றி கழகத்திற்கு மாறி பல நாட்களாகிவிட்டது என்றும் விசிகவில் சில தலைவர்கள் மட்டுமே இருக்கிறார்கள் எனவும் கூறினார்.
திருமாவை திமுக அடியாளாக பயன்படுத்துகிறது என்றும் திருமா அடிப்படையில் நல்லவர் என்றும் ஆனால் சேர்க்கை தான் தவறு எனவும் ஆதவ் அர்ஜுனா தெரிவித்தார். செந்தில் பாலாஜி பேசினால் அரசியலைப் பற்றி பேசினால் விலகுகிறேன் எனவும் பெரியாரைப் பற்றிய அவர் பேசட்டும்., இங்கேயே தூக்கு மாட்டிக் கொள்கிறேன் என்றும் தடாலடியாக தெரிவித்தார்.

கொள்கை ரீதியாக பாஜக எதிர்க்கும் இடத்தில் நாங்கள் எதிர்ப்போம் என்றும் முதல் குரல் நாங்களாக தான் இருப்போம் எனவும் கூறினார். ஒட்டு மொத்தமாக ஊழல் மட்டுமே செய்து கொண்டிருப்பதாகவும் திமுகவை சாடினார். அறிவாலயத்தில் பெரியார் மற்றும் அம்பேத்கர் சிலைகள் ஏன் இல்லை என்று கேட்டுள்ளார்.
இதையும் படிங்க: உலக அளவில் விசில் ட்ரெண்ட்..! தவறு நடந்தால் தவெக குரல் ஒலிக்கும்..! அருண் ராஜ் உறுதி..!
திமுக ஊழல்வாதி கட்சி இல்லை என்றும் செந்தில் பாலாஜி சிறந்த கம்யூனிஸ்ட் தோழர் என்றும் செந்தில் பாலாஜி புரட்சியாளர் அம்பேத்கரின் வாரிசு எனவும் அமைச்சர் நேரு பெரியாரின் வளர்ப்பு பிள்ளை என்று தைரியம் இருந்தால் சொல்லுங்கள் என்று கூறினார். யார் மிரட்டுகிறார்களோ அவர்கள்தான் பயப்படுகிறார்கள் என்று அர்த்தம் என்றும் யார் அமைதியாக இருக்கிறார்களோ அவர்கள் தைரியமாக இருக்கிறார்கள் என்றும் அர்த்தம் எனவும் தெரிவித்தார். விஜய் பேசுவதைப் பார்க்க 5 கோடி பேர் காத்துக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: செந்தமிழ் காக்கும் சேனையை விஜய் தருவார்..! தவெக செயல்வீரர்கள் கூட்டத்தில் நாஞ்சில் சம்பத் உறுதி..!