ஊழல் புகாரில் அமைச்சர் நேரு மீது வழக்குப்பதிய நீதிமன்ற உத்தரவு பிறப்பித்திருக்கும் நிலையில் இனி, ஊழல் திமுகவினர் யாரும் தப்பிக்க முடியாது என தமிழக வெற்றி கழகத்தின் கொள்கை பரப்பு குழுச் செயலாளர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். திமுக அமைச்சர் கே.என்.நேரு மீதான 1,020 கோடி ரூபாய் ஊழல் புகார் குறித்து, உடனடியாக வழக்குப் பதிவு செய்ய தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் சாட்டையடி உத்தரவு பிறப்பித்திருப்பது, ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் பெரும் நம்பிக்கையைத் தருகிறது என்று தெரிவித்தார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில், ஒவ்வொரு டெண்டருக்கும் 25 சதவீதம் வரை லஞ்சம் வசூலிக்கப்பட்டதாக டிஜிட்டல் ஆதாரங்களுடன் தமிழக டிஜிபி-க்கு அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியது என்றும் அதுமட்டுமல்லாமல், அதிகாரிகள் மற்றும் பணியாளர் பணி நியமனத்திற்குத் தலா 35 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் வாங்கப்பட்டிருக்கிறது என்ற அதிர்ச்சித் தகவலும் அமலாக்கத்துறையின் கடிதத்தில் இடம்பெற்றிருந்தது எனவும் கூறினார்.

அமலாக்கத்துறை கடிதம் அனுப்பியதும், ஏதோ உத்தமச் சீலர்களைப் போல திமுகவினர் நாடகம் பாடியதாகவும், தற்போது, கே.என்.நேரு மீதான புகாரில் முகாந்திரம் இருப்பதாக உயர்நீதிமன்றமே தெளிவாகக் கூறியிருக்கிறது என்றும் தெரிவித்தார். அமலாக்கத்துறை கொடுத்திருக்கும் ஆதாரங்கள் வழக்குப் பதிவு செய்யப் போதுமானவை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் சுட்டிக்காட்டியிருக்கிறது என்றும் ஆதாரங்கள் கையில் இருந்தும் கூட, எந்தத் தவறுமே செய்யாதது போல முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நடித்துக் கொண்டிருந்தார் எனவும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: உடனே செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்துங்க... TVK மாவட்டச் செயலாளர்களுக்கு விஜய் அதிரடி உத்தரவு..!!!
இனி திமுகவின் ஊழல் அமைச்சர்கள் யாரும் நீதியின் முன் தப்பிக்க முடியாது என்றும் "ஊழல் எஜமான்கள் நிறைந்த கட்சி திமுக" என்பது மீண்டும் ஒருமுறை ஊர்ஜிதமாகியுள்ளது என்றும் இந்த வெற்று விளம்பர 'மாடல்' திமுக ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படுவதற்கும், ஊழல் திமுக அமைச்சர்கள் அனைவரும் சிறைக்குச் செல்வதற்கும் காலம் கனிந்துவிட்டது எனவும் அருண்ராஜ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: விஜய்க்கு ஓட்டு போடுங்க... விசிலுக்கு ஓட்டு போடுங்க..!! தீவிர வாக்குச் சேகரிப்பை தொடங்கிய செங்கோட்டையன்...!!