தமிழக வெற்றி கழக அரசை சோபா மாடல் அரசு என்று எதிர் கட்சியினர் விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சோபா மாடல் அரசு என்பதை அடிக்கடி சுட்டிக்காட்டி வருகிறார். இன்று தனது எக்ஸ் பக்கத்தில் நான்கு பேர் அமரும் சோபா புகைப்படத்தையும் ஐந்து பேர் அமரும் சோபா புகைப்படத்தையும் பதிவேற்றம் செய்திருந்தார். அவருக்கு அமைச்சர் அருண்ராஜ் பதிலடி கொடுத்துள்ளார்.
தந்தை பெரியார் மற்றும் பேரறிஞர் அண்ணா அவர்களை கேடயமாகப் பயன்படுத்தி, தாத்தாவுக்கு பின் மகன், மகனுக்குப் பின் பேரன் என ஒரு குடும்பம் மட்டுமே ஊறித் திளைக்கும் “sonஆதன” சிம்மாசனத்தில் சரிந்து கிடக்கும் வாரிசுத் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என்று அமைச்சர் அருண்ராஜ் விமர்சனம் செய்துள்ளார்.

அதிகாரத்தை பரவலாக்கும் , அனைவரையும் அமர வைக்கும் ஜனநாயக சோஃபாக்கள் பற்றி உங்களுக்கு எப்படி தெரிந்திருக்கும்? என்ற கேள்வி எழுப்பி இருக்கிறார். நான்கு பேர் மட்டுமல்ல, ஐந்து பேர் மட்டுமல்ல... மாண்புமிகு முதலமைச்சர் தலைமையில் ஒட்டுமொத்த அமைச்சர்களும் அமர்ந்திருக்கும் ஜனநாயக சோஃபா இது என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "வெள்ளை அறிக்கை தவெகவின் எஸ்கேப்பிசம்"..! வெளுத்து வாங்கிய தங்கம் தென்னரசு..!!
சனாதன சிம்மாசனங்களுக்கு ஜனநாயக சோஃபாக்கள் பற்றி பேசுவதற்கு அருகதையோ, யோக்கியதையோ கிடையாது என்றும் சாடினார். தமிழ்நாட்டில் 04.05.2026 அன்று வாரிசுகளின் சிம்மாசனம் ஒழிக்கப்பட்டு விட்டது என்றும் இனி தமிழ்நாட்டில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையிலே அனைவருக்கும் அதிகார பகிர்வு அளிக்கக்கூடிய ஜனநாயக சோஃபா மட்டும் தான் எனவும் சுட்டி காட்டினார்.
இதையும் படிங்க: மின் கட்டண உயர்வை கைவிடாவிட்டால் போராட்டம்..! போர்க்கொடி தூக்கிய வேல்முருகன்..!