தமிழக வெற்றி கழகத்தின் முக்கிய நிர்வாகியும், கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளருமான அருண் ராஜ் வரவிருக்கும் 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் கட்சியின் சார்பில் போட்டியிட உள்ளார். இது தவெகவின் முதல் சட்டமன்றத் தேர்தல் அனுபவம் என்பதால், அருண் ராஜின் வேட்பாளர் பதவி கட்சியின் வளர்ச்சி மற்றும் கொள்கைப் பரப்புச் செயல்பாடுகளில் அவரது முக்கிய பங்கை எடுத்துக்காட்டுகிறது.
அருண் ராஜ் முன்பு இந்திய வருமான வரி அதிகாரி ஆகப் பணியாற்றியவர். 2025ஆம் ஆண்டு மே மாதத்தில் தனது பதவியில் இருந்து தன்னார்வ ஓய்வு பெற்று அரசியலுக்கு வந்தார். தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த அருண் ராஜை, கட்சித் தலைவர் விஜய் கொள்கைப் பரப்பு பொதுச் செயலாளராக நியமித்தார். இந்தப் பொறுப்பில் அவர் கட்சியின் கொள்கை உருவாக்கம், பிரச்சார உத்திகள் மற்றும் மக்களுடன் தொடர்பு கொள்ளும் செயல்பாடுகளை மேற்கொண்டார்.

தேர்தல் அறிக்கை தயாரிக்கும் 11 பேர் கொண்ட குழுவிலும் அவர் இடம் பெற்றார். 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடும் முடிவை எடுத்துள்ளது. மார்ச் 2026இல் வெளியான வேட்பாளர் பட்டியலில் திருச்செங்கோடு தொகுதிக்கு அருண் ராஜ் பெயர் இடம்பெற்றது. இந்தத் தொகுதி கொங்கு மண்டலத்தில் அமைந்துள்ளது. அருண் ராஜின் நிர்வாகப் பின்னணியும், கட்சியின் கொள்கைப் பரப்புப் பணிகளில் அவரது ஈடுபாடும் இந்தத் தேர்வுக்கு காரணமாகக் கருதப்படுகிறது.
இதையும் படிங்க: முற்றிபோன பிரச்சனை..! தவெக TO திமுக... கட்சி தாவிய ரஞ்சனா நாச்சியார்..!
தேர்தல் நடைமுறைகள் தொடங்கிய பிறகு அருண் ராஜ் திருச்செங்கோடு தொகுதியில் தீவிரமாகப் பணியாற்றினார். தொடர்ந்து தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் அருண் ராஜ் இன்று தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார். தேர்தல் அதிகாரியிடம் தனது வேட்பு மனுவை அருண்ராஜ் வழங்கியுள்ளார். முன்னதாக பெரியார், கர்மவீரர் காமராஜர் சிலைகளுக்கு அவர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதையும் படிங்க: சங்கீதாவுக்கு நடப்பது கொடுமை... நியாயம் கிடைக்கணும்..!! தமிழிசை ஆதரவு குரல்..!!