ததமிழக அரசியலில் புதிய திருப்பமாக, தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணிக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிப்பதாக அதன் தலைவர் ஜி.கே. வாசன் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு, ஆளும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு கூடுதல் பலத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
அக்டோபர் 6 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இடைத்தேர்தல்கள், தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைத்த பிறகு நடைபெறும் முதல் தேர்தல் பரீட்சையாகக் கருதப்படுகிறது. அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களால் காலியான இந்த இரண்டு தனித்தொகுதிகளிலும், தமிழக வெற்றிக் கழகம் தனது வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

மதுராந்தகத்தில் மரகதம் குமரவேல் மற்றும் தாராபுரத்தில் சத்யபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ளது.இந்தச் சூழலில், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு முக்கியத்துவம் பெற்றது.
இதையும் படிங்க: நந்திகிராமை தொடர்ந்து ரெஜிநகரிலும் மம்தா அணிக்கு அதிர்ச்சி! வேட்பாளர் திடீர் வாபஸ்! மேற்கு வங்கத்தில் பரபரப்பு!
கடந்த ஜூன் மாதம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகி சுதந்திரமாக இயங்க முடிவு செய்திருந்த இந்தக் கட்சி, இடைத்தேர்தல் தொடர்பாக முடிவெடுக்கும் அதிகாரத்தை தலைவர் ஜி.கே. வாசனுக்கு வழங்கியிருந்தது. அதன்படி, கட்சியின் மாவட்டத் தலைவர்கள் மற்றும் மாநில நிர்வாகிகளுடன் ஆலோசித்த பின்னர், தமிழக வெற்றிக் கழக கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதாக அவர் அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: மம்தா அணியின் அதிரடி வழக்கு! திரிணாமுல் காங்கிரசுக்கு மீண்டும் அதிர்ச்சி! உச்ச நீதிமன்ற நோட்டீஸால் பரபரப்பு!